அம்மா எனும் தெய்வம் இவ்வுலகில் இருப்பதனால் தான் என்னவோ உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. அன்பென்ற மழையை பொழிந்து பாசம் என்னும் அமிழ்தத்தை கொடுத்து நம்மை வாழ வைக்கும் கருணை தெய்வம் நம் அம்மா !!!
என்னை பெற்றிடும் வரையில் பத்து மாதம் சுமந்து என் சுமையை தாங்கிக் கொள்வது என் தாய் தான். பிறந்த பொழுது என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டுவதும் என் தாய் தான்.வளரும் வாழ்க்கை முறையை எனக்கு சொல்லி கொடுப்பதும் என் தாய் தான் !!! நான் செய்யும் தவறுகளை தாங்கி கொண்டு அதனை சுட்டிக் காட்டி திருத்துவதும் என் தாய் தான் !!!
தனக்கு இல்லையென்றாலும் தன் பிள்ளையின் நலனுக்காக தியாகம் செய்யும் தாயே தெய்வத்திலும் மேலான தெய்வம். காரணம் கருதி உதவி செய்யும் இவ்வுலகில் தன்னலம் கருதாது பேணி காக்கும் தாயை காட்டிலும் எதுவும் பெரிதல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன் மகன் (அல்லது) மகளின் நலனை கருத்தில் கொண்டு வாழும் தாயின் அன்பிற்கு ஒரு காலமும் ஈடு இணையாக எதுவும் சொல்ல முடியாது !!!
தன் மகன் (அல்லது) மகளின் உயர்வை கண்டு பெருமைப்படுபவள் முதலில் தாய் தான். தன் கஷ்டத்தை தெரியப்படுத்தாமல் தன் மகன் (அல்லது) மகளின் தேவையை பூர்த்தி செய்பவள் தாய். தன் மகன் (அல்லது) மகளின் தெரியாமல் செய்யும் தவறுகளை மன்னிக்கும் பக்குவம் கொண்டவள் தாய். தன் வாழ்வின் விருப்பத்தை கூட பொருட்படுத்தாமல் தன் மகன் (அல்லது) மகளின் விருப்பத்தை விரைந்து செய்யும் விருப்பம் கொண்டவள் தாய் !!!
எது நல்லது ? எது கெட்டது ? என தன் மகன் (அல்லது) மகளின் நலன் விரும்பும் நலன் விரும்பி தாய். தன் மகன் (அல்லது) மகளிடம் சிறந்த புத்தியை புகட்டி ஒழுக்கம் மற்றும் அறநெறிகளை மேட்கொள்ளுமாறு அறிவுரை சொல்லும் சிறந்த குரு தாய். இவ்வளவும் செய்யும் தாயன்பை விட உலகில் வேறு எதுவும் ஈடு இணை ஆகாது !!! நம் உயிருள்ள வரையிலும் தாய்க்கு நாம் பட்ட கடன் தீராது. !!!