இனிய தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

காதல் என்றுமே ஒரு வகை அழகு என்றால் நட்பு என்பதை பேரழகு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு புரிதலிலும் சரி, ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதிலும் நட்பிற்கு நிகர் நட்பே.

காதலர்களுக்குள் ஏற்படும் புரிதல் பிரச்னை,  சண்டை, மோதல் போன்ற வீண் வேலைகள் எல்லாம் நட்பில் இருப்பதில்லை.

அப்படிப்பட்ட ஆண் மற்றும் பெண் நண்பர்களை நீங்கள் பெற்று இருந்தால் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகளே.

இந்த பதிவில் என் நினைவலைகளில் உதித்த சிறந்த தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை இங்கு பதிவிட்டு உள்ளேன்.

பெண் தோழி என்பவள் என்றுமே சிறந்தவளே. சில சமயம் நாம் யோசிப்போம் காதலியிடம் கூட சில விஷயங்களை சொல்ல சண்டை ஏதேனும் வந்து விடுமோ என்று பயந்து.

ஆனால் நம் தோழியிடம் அனைத்துமே பகிரலாம். ஒளிவு மறைவு இன்றி பேசலாம். இயல்பாகவே உறவுகளில் நண்பர்களுக்கு மட்டும் தான் புரிதல் என்பது அதிகமாக இருக்கும்.

கேலிகள் மற்றும் கிண்டல் எல்லாமே இங்கு வாடிக்கையாகவே மாறி விடும். தயக்கம் எனும் சொல் இங்கு இருப்பதில்லை.

எனவே உங்கள் உயிர் தோழியின் பிறந்த நாளில் கண்டிப்பாக அவர்களை வாழ்த்த மறந்து விடாதீர்கள்.

உயிர் தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

ஒரு நல்ல தோழி என்பவள் நம் கூட பிறக்கும் சகோதரி இல்லையென்றாலும் அவர்களை எல்லாம் விட நம்மை பற்றி நன்கு தெரிந்து வைத்து இருப்பாள்.

ஒரு நல்ல நண்பியாய் என்றுமே நம் நலனை விரும்பும் ஒரு ஜீவன். எனவே நான் இங்கு பதிவிட்டுள்ள இந்த தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை கண்டிப்பாக உங்கள் தோழியின் பிறந்த நாளில் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை அனுப்ப கண்டிப்பாக பயன்படும்.

எத்தனையோ மனஸ்தாபங்கள், கிண்டல்கள், சின்ன சின்ன வன்முறைகள் என நாம் அடிக்கடி சண்டையிட்டு கொண்டாலும் என்னால் உன்னை என்றுமே மறக்க முடியாது என் இனிமையான தோழியே பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Flower

எத்தனையோ மனஸ்தாபங்கள், கிண்டல்கள், சின்ன சின்ன வன்முறைகள் என நாம் அடிக்கடி சண்டையிட்டு கொண்டாலும் என்னால் உன்னை என்றுமே மறக்க முடியாது என் இனிமையான தோழியே பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீ என்னுடன் மட்டும் தான் பிறக்கவில்லை மற்றபடி என்றுமே என் வாழ்க்கையின் சுக துக்கங்களை மனம் விட்டு பகிர நினைப்பது என் தோழி உன்னிடம் மட்டும் தான். என் இனிய வாழ்த்துக்கள்

Flower

நீ என்னுடன் மட்டும் தான் பிறக்கவில்லை மற்றபடி என்றுமே என் வாழ்க்கையின் சுக துக்கங்களை மனம் விட்டு பகிர நினைப்பது என் தோழி உன்னிடம் மட்டும் தான். என் இனிய வாழ்த்துக்கள்.

யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம், இன்னார் என்று தெரியாது உண்மையாய் இருந்தோம், என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன்

Flower

யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம், இன்னார் என்று தெரியாது உண்மையாய் இருந்தோம்.

என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.