சில நேரங்களில் அன்பாய் இருந்து அரவணைத்த என் தோழனே என்னை பிரிந்து சென்றால் யாரிடம் சென்று சொல்ல என் எண்ணங்களை…
உரிமையோடு உள்ள நட்பில் உயிராய் இருக்கலாம் தவறில்லை ஆனால் பழகிய பின்பு பிரிவு என்பது இருக்க கூடாது.
நாம் பழகிய தருணங்கள் உனக்கு நினைவிருக்குமெனில் பிரிவிலும் உன் நினைவுகள் எனக்கு சுகமே என் ஆருயிர் தோழியே.
நட்பினால் ஒன்று பட்டோர் கைகள் வீழ்வது இல்லை இந்த உலகமே எதிர்த்தாலும் நல்ல நட்பிற்கு பிரிவென்பது கிடையாது.
நட்பு என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் பிரபஞ்சம் முழுவதும் மூடர்கள் கூடாரமே. என்றும் நிரந்தர உறவு நண்பர்கள் ஒன்றே என்றும் அது புதிதே.
நட்பிலும் வலியுண்டு, அது பால் வேறுபாடு அறியாதது, காதலை விட அழகானது, அன்பினால் அடைப்பட்டு கிடைப்பது, மனதால் இணைவது , பிரிவிலும் நினைப்பது, மாற்றங்கள் பல வந்தாலும் என்றும் தன் தன்மையில் மாறா குணம் நட்பு மட்டுமே.
சில சமயம் நம்மிடம் நட்பால் நன்கு பழகியவர்கள் கூட சின்ன சண்டையில் பிரிந்து நமக்கு வலியை தந்து விட்டு சென்று விடுகிறார்கள்.
மலரை கூட பறித்து விடலாம் யாரிடமும் கேட்காமல் ஆனால் உன் நட்பை எவராலும் என்னிடம் இருந்து பிரித்து விட இயலாது.
என் பழைய புத்தகங்களை எடைக்கு போடுகையில் தீடிரென்று பார்த்த என் பால்ய ஸ்நேகிதனின் கிறுக்கல்கள், அவன் வரைந்த ஓவியங்கள் இன்றும் நினைத்தாலே இனிக்கிறது.