அன்று சற்றும் எதிர்பாராமல் பழைய நண்பனை பார்த்த நொடியில் மனதில் ஓர் பரவசம் !!! “அடடா இவன் என் பழைய நண்பன் அல்லவா !!! ” என்று சட்டென்று பழைய நினைவுடன் நண்பனை அருகில் சென்று பெயரை சொல்லி அழைக்க பதிலுக்கு “ஜி” என்ற பெயரில் என்னை சொல்லி அழைத்தான் என் பெயரையும் மறந்து.
அதன் பிறகு அவனிடம் பேச தோன்றவில்லை. புன்னகை புரிந்து கொண்டே விடை பெற்றேன் அவன் பழைய நினைவுகளையும் சேர்த்து தான்.