அழகிய தமிழ் கவிதைகள் | புது தமிழ் கவிதை
பார்க்கும் பார்வைகள் செய்கைகளால் உரைக்கும் ஆயிரம் கவிதைகளை விடவா உன் உதடுகள் கூறும் காதல் மொழி அழகாக திகழப்போகிறது.
பிடிக்காமல் விட்டு சென்றால் கூட பரவாயில்லை சகித்து கொள்ளலாம். நம்மை சிறிதளவும் புரிந்து கொள்ளாமல் அல்லவா பிரிந்து செல்கிறார்கள்.
வாழ்க்கை மிகமும் இனிக்கிறது உன் போன்ற பாசமிகு உறவு என் வாழ்க்கை பயணத்தில் நிரந்தரமாகிவிட்டதால்.
நேசிக்கும் இரு இதயங்கள் ஒன்றாக கலந்திருந்தால் பேசாமல் கிடந்தாலும் பார்க்காமல் தவித்தாலும் காலங்கள் கடந்தாலும் நேசம் குறைவது கிடையாது.
ஆசைப்பட்டது எல்லாம் அப்படியே நடந்து விட போவது கிடையாது. அப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் கூட இங்கு அனைத்துமே நிலைப்பதும் கிடையாது.
நீ மட்டுமே என் துணையாக எக்கணமும் வேண்டுமே என் நினைவு உள்ள வரையிலும். என் உயிர் பிரியும் இறுதி மூச்சிலும் உன் மடியில் நான் உயிர் துறக்க வேண்டுமே.
உன் விழி என்னும் பார்வைகளில் வீறு கொண்டு நீ பார்க்கும்போது கடவுள் சிலை போல சற்று நேரம் அமைதியாய் நான் ஆடித்தான் போய்விடுகின்றேன்.
காயப்படுத்தும் முட்செடிகளில் விடும் அழகான ரோஜா பூவைப்போலவே என் காதலிலும் வலிகள் அதிகம் இருந்தாலும் நான் கொண்ட நேசம் பூக்கள் போல மிகவும் அழகானது.
நீ இல்லாத இந்த நாட்களில் உன் நினைவுகள் என்ற பெருங்கடலில் எவ்வளவு நீரை நான் உட்கொண்டாலும் கூட தாகம் மட்டும் இன்னமும் அடங்கவில்லையே?