பொதுவான பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palankal

பல்லி விழும் பலன் - Palli Vilum Palan

பொதுவாக நம் அனைவரது வீடுகளிலும் பல்லி காணப்படும். நம் வீட்டின் சுவர்களிலும், இடுக்குகளிலும், ஜன்னல் மற்றும் கதவுகளில் இயல்பாக பல்லி உலாவி கொண்டிருக்கும். எவ்வளவு நுண்ணியிரினங்கள் நம் வீடுகளில் காணப்பட்டாலும் பல்லி சொல்லுக்கும் நம் மீது பல்லி விழுவதற்கும் முன்னோர்கள் முன்கூட்டியே காரணங்களை கண்டறிந்து வைத்துள்ளனர். இந்த பல்லியை கௌளி என்றும் குறிப்பிடுவார்கள்.

நாம் கும்பிடும் ஒன்பது கிரகணங்களில் கேது பகவான் பல்லியை குறிக்கிறது. எனவே அவசியம் பல்லி விழும் பலன்களை தெரிந்து வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நம் உடல் பாகங்களில் எந்தெந்த பகுதிகளில் பல்லி விழுந்தால் என்ன நன்மைகள் வரப்போகிறது அல்லது எந்த வகைகளில் நமக்கு நஷ்டமோ, தீமைகளோ நேரப்போகிறது என்பதை ஒவ்வொன்றாக பாப்போம்.

அந்த காலத்தில் பல்லி விழும் பலன்கள் மற்றும் பல்லி கத்தும் பலன்களை அறிய கௌளி சாஸ்திரம் கற்பார்கள்.பழம்பெரும் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் கூட மனிதர்களுக்கு வரும் எதிர்வினைகளை முன் கூட்டியே அறிய வைக்கும் ஒரு உயிரினங்களில் சிறப்பானதாக பல்லி கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எதிர்காலத்தின் செயல்களை கடவுள் நேரில் வந்து சொல்வதாகவே இந்த பல்லியை தெய்வத்தின் தூதுவனாக சொல்கின்றனர்.

பல்லி விழும் பலன்களை (Palli Vilum Palangal) பற்றி முன்னோர்கள் சொல்வதுஎன்ன?

பல்லி விழும் பலன்களை - Palli Vilum Palangal

இந்த பதிவில் பல்லி விழும் பலன் பற்றி நம் சான்றோர்கள் கூறியதை காண்போம்

 தலையில் பல்லி விழுந்தால்…

பல்லி எதிர்பாராமல் தலையில் விழுந்தால் அவருக்கு அடுத்தவர்களிடமிருந்து துன்பம் நேரலாம் அல்லது மனநிம்மதி கெடலாம் அல்லது சொந்த குடும்பத்திலோ நெருக்கமான உறவினர்களின் வீட்டில் மரணம் நிகழலாம்.

குறிப்பாக பல்லி நமது தலையில் எந்த பக்கம் விழுந்தாலும் பிரச்சனை தான் உண்டாகும். தலையின் இடது பக்கம் விழுந்தால் துன்பம் நேரும். வலது பக்கம் விழுந்தால் கலகம் உண்டாகும்.

பல்லி நெற்றியில் விழுந்தால்…

பல்லி நமது நெற்றியில் விழுவது நல்லதாகும். இடது பக்கமாக விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது பக்கமாக விழுந்தால் லட்சுமிகரம் கிடைக்கும்.

தலைமுடியில் விழுந்தால்…

பல்லி நம் தலை முடியில் விழுந்தால் நன்மை பயக்கும்.

முதுகு பல்லி விழும் பலன்…

முதுகின் வலது புறம் விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.
பல்லி முதுகின் இடது புறம் விழுவது கவலை தரும்.

முகத்தில் விழுந்தால் …

பல்லி உங்கள் முகத்தில் உள்ள கன்னத்தில் விழுந்தால் விரைவில் உங்கள் வீட்டின் வாயிற்கதவை உறவினர் தட்ட வாய்ப்புண்டு. முகத்தின் புருவத்தின் மீது விழுந்தால் ஏதாவது உயர் பதவியில் இருப்பவர்களிடம் இருந்து ஆதாயம் கிடைக்கலாம். அதுவே கன்னம் அல்லது கண்களின் மீது விழும்போது ஏதாவது சில காரணங்களுக்காக அடுத்தவர் உங்களை தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

கை அல்லது காலில் பல்லி விழுந்தால் …

பல்லி உங்கள் இடது கை அல்லது இடது கால்களில் விழுந்தால் வாழ்க்கையில் நீங்கள் மனம் நெகிழும் வண்ணம் மகிழ்ச்சி உண்டாகும். அதுவே வலது கையிலோ அல்லது காலிலோ விழுந்தால் உடல்நலம் கேடு வர வாய்ப்புண்டு.

பாதத்தில் விழுந்தால் …

பல்லி உங்கள் பாதத்தில் விழுந்தால் எதிர்காலத்தில் பயணம் செல்ல வாய்ப்புண்டு.

பிறப்புறுப்பு …

பிறப்புறுப்பின் மீது விழுந்தால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் கஷ்டங்கள் உண்டாகும், வறுமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

பாதத்தில் விழுந்தால் …

பல்லி உங்கள் பாதத்தில் விழுந்தால் எதிர்காலத்தில் பயணம் செல்ல வாய்ப்புண்டு.

பிறப்புறுப்பு …

பிறப்புறுப்பின் மீது விழுந்தால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் கஷ்டங்கள் உண்டாகும், வறுமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

தொப்புள் பல்லி விழும் பலன்…

தொப்புளில் விழுந்தால் செல்வம் பெருகும்… விலையுயர்ந்த கற்கள் மற்றும் நவரத்தினங்கள் கூட கிடைக்கலாம்.

தொடை…

பல்லி உங்கள் வலது அல்லது இடது தொடையில் விழுந்தால் பெற்றோர் உங்களால் வருத்தப்படுவார்கள்.

பல்லி மார்பில் விழுந்தால் …

உங்கள் வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் / தனம் உண்டாகும் … இடது மார்பாக இருந்தால் சுகம் …

கழுத்து பகுதி …

கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் மற்ற நபர்களிடம் பகையை வளர்த்து கொள்வீர்கள். கழுத்தின் இடப்பக்கம் விழுந்தால் வெற்றி கிட்டும் …

வயிற்றில் விழுந்தால்…

பல்லி நம் வயிற்றின் மீது இடது புறமாக விழுந்தால் மிகுந்த மகிழ்ச்சியை தரும். அதுவே வலது பக்கம் மீது விழுவது தானியம் என்று குறிப்பாக சொல்வார்கள்.

பல்லி கண்களின் மீது விழுந்தால்…

நம் கண்களின் இடது பக்கம் பல்லி விழுவதால் ஏதாவது நினைத்து பயம் ஏற்படலாம்.
இதுவே வலது கண்களில் விழுந்தால் சுகம் அமையும்.

தோல்…

பல்லி தோல்களின் மீது விழுவது நீங்கள் நினைத்த காரியங்கள் மற்றும் செய்து முடிக்க நினைக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கபாலம்

பல்லி கபாலத்தில் மீது விழுந்தால் வரவு கிடைக்கும்.

மூக்கின் மீது பல்லி விழுந்தால் …

பல்லி மூக்கின் வலது புறம் விழுந்தால் நோய்கள் வர வாய்ப்புண்டு. அதே இடது பக்கம் விழுந்தால் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் உண்டாகும்.

மணிக்கட்டு பல்லி விழும் பலன்…

பல்லி நம் மணிக்கட்டின் இடது பக்கம் வழிவது கீர்த்தி பயக்கும்.

மணிக்கட்டின் மீது வலது புறம் விழுந்தால் பீடை.

பல்லி நகத்தில் விழுந்தால்…

இடது பக்கம் பல்லி நகத்தில் விழுவது பொன், பொருள்களில் நஷ்டம் உண்டாகும்.

நகம் வலதுபுறம் பல்லி விழுந்தால் பண விரயம் மற்றும் தேவையில்லாத செலவு ஏற்படும்.

காதில் விழுந்தால்…

பல்லி வலது புறம் விழுந்தால் ஆயுள்.அதுவே பல்லி காதின் இடது புறம் விழுவது லாபம் தரும் விஷயமாகும்.

பரிகாரம்:

பல்லி நம் மீது விழுவது இயல்பாக நடந்தாலும் அதற்கான தக்க பலன்களை பார்த்து பரிகாரம் செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்றானதாகும். எனவே முதலில் பல்லி நம் மீது விழுந்தால் தூய்மையான நீரினால் நீராடி விட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் சிறப்பு விளக்கு ஏற்றி வையுங்கள். மனகுறைகள் அப்போதும் அகலவில்லையெனில் கோவிலுக்கு சென்று மனமார இறைவனை வழிபடலாம்.

மேலும் காஞ்சிபுரத்தில் அமைந்து உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பல்லிக்கு உகந்த கோவிலாக கருதப்படுகிறது. அங்கு அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளியில் உள்ள பல்லி சிலையை நாம் தொடுவதால் ஏதாவது தீய அசம்பாவிதங்கள் மற்றும் தோஷங்கள் நீங்குவதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலும் பல்லியை வழிபடுகின்றனர். ஆகையால் அருகில் இருப்பவர்கள் அங்கேயும் கூட சென்று வழிபடலாம்.

இப்போதும் பல வீடுகளில் நாம் பார்க்கலாம் ஏதாவது செயல்களை செய்யலாமா வேண்டாமா என்று உரையாடி கொண்டு இருக்கும் மத்தியில் பல்லி கத்தும். அதாவது பல்லி தன சமிக்யை மொழியில் ஒலி எழுப்பி நமக்கு அது சொல்லப்போவதை வலியுறுத்தும்.

அது போலவே பல்லி நம் மீது விழுவதில் சிறப்பான செயல்களும் அடங்கும் சோகமான சம்பவங்கள் நடக்க போவதையும் அது உணர்த்தலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பலாபலன்களை பார்த்து எதையும் சான்றோர்கள் முன்பு கலந்து ஆலோசித்து முடிவுக்கு வருவது தான் உசிதமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.