மகள்

என் அன்பு இதயத்தில் விழுந்த
ஒற்றை மழைத்துளி
நீ ! உயிரே…
கண் சிமிட்டும் நேரத்தில் ஆயிரம்
கவிதையெழுதுவேன்
இமைப்பது நீயெனில்…
என் வார்த்தைகள்
எல்லாம் தற்கொலை செய்கிறது கன்னியவள்
காந்தவிழிக்கு முன்.
உன் புன்னகையால்
இருள் கூட மெழுகுவர்த்தி
ஏற்றுகிறது.
கண்களால் கைதியாக்கி மனதால் சிறைபிடித்தாய்
என்னவளே !
பொறுமையின் எட்டா சிகரமானவளே !
அன்பிற்கு அடைக்கலமானவளே….
உன்னுடன் இருந்த
அந்த இனிமையான
பொற்காலங்கள்
இந்த தனிமையில்
தான் தெரிகிறது
எதை இழந்தேன் என்று !
யுகங்களை கூட
சுகங்களாக கழித்திடுவேன்
உன் முகம் பார்த்தால்….
நீ இறைவன் படைத்த அதிசயமா ?
இல்லை ரவிவர்மாவின்
ஓவியமா ?.விடை தெரியாது தவிக்கிறேனடி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.