மனதின் வேகமோ காற்றை விட வேகமானது. நொடிக்கு நொடி தன் சிந்தனைகளை மாற்றுகிறது. ஒன்றை உண்மையாக நேசித்த மனதிற்கு அதை மறக்கத் தெரியாது !!!
நம் வார்த்தைகளில் வேண்டுமாயின் பொய்கள் இருக்கலாம்.ஆனால் மனதிற்கு தெரிந்ததோ உண்மை ஒன்று தான் !!!
மனது தனக்கு விருப்பமானவர்களை மட்டுமே தேடும். அவர்களை பற்றிய என்ன அலைகளையே தன்னுள் பதித்து வைத்திருக்கும் !!!.
யாரையும் எளிதாக மனதிற்கு பிடிக்கத் தெரியாது.அப்படி பிடித்துப் போனால் அவர்களை மனதிற்கு மறக்க தெரியாது !!!
இவை அனைத்தும் ஒருவர் மீது உண்மையான அன்பு கொண்ட மனதிற்கு மட்டுமே பொருந்தும். !!!
மனதின் அலை பாயும் சிந்தனைகளை மாற்றுவது மிகவும் கடினமானது.ஒன்றை பற்றிய சிந்தனை தோன்றி விட்டால் அதை பற்றியே நினைக்கும் !!!
யார் என்ன சொன்னாலும் மனது தனது பாணியை மாற்றாது..விருப்பமான செயல்களையே செய்யும்.ஏனெனில் மனதிற்கு நடிக்கத் தெரியாது !!! பிடிக்கத் தான் தெரியும் !!!