மனதை தொட்ட அம்மா கவிதைகள் (தமிழ் தாய் கவிதை)

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.

கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது

கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.

சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் அம்மா என் அருகிலே

சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் “அம்மா” என் அருகிலே.

என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து ஜனிக்க விரும்பும் கருவறை

என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து ஜனிக்க விரும்பும் கருவறை.

எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்

எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று 🙂 “சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்”.

வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது

வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது.

யார் சொன்னது என் காதலி தான் என்னை முதலில் காதலித்தது என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என் அன்னை என்னை நேசிக்க தொடங்கி விட்டாள்

யார் சொன்னது என் காதலி தான் என்னை முதலில் காதலித்தது என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என் அன்னை என்னை நேசிக்க தொடங்கி விட்டாள்.

தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது அம்மா என்னும் மூன்று எழுத்து

தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.

எதையும் கட்டளையிட்டு செய்ய சொல்பவன் தான் "அப்பா" தன் கருணை மொழியில் உணர்த்தி பாசமுடன் எதையும் செய்ய சொல்பவளே அம்மா

எதையும் கட்டளையிட்டு செய்ய சொல்பவன் தான் “அப்பா” தன் கருணை மொழியில் உணர்த்தி பாசமுடன் எதையும் செய்ய சொல்பவளே “அம்மா”.

எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே

எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே.

எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள் அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள் அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு, நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை, தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய அம்மா

அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு, நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை, தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய அம்மா.

உன்னை பத்து மாதம் முகம் கூட தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே

உன்னை பத்து மாதம் முகம் கூட தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே.

இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்துமே உன் காலுக்கு அடியில் உன் அன்னையின் அன்பை தவிர

இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்துமே உன் காலுக்கு அடியில் உன் அன்னையின் அன்பை தவிர.

இறைவன் இல்லை என்று சொன்னால் அது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்

இறைவன் இல்லை என்று சொன்னால் அது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.

கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான "அம்மா" வை மறந்து தான் போகிறோம்

கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.

தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி அம்மா

தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட  அற்புத பிறவி  “அம்மா”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.