இனிக்கும் மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை | துணைவி | இல்லத்தரசி

உலகில் நாம் கொண்டுள்ள உறவுகளிலே அம்மாவிற்கு பின் மனைவி தான் என்று சொல்லுவார்கள் (தாய்க்கு பின் தாரம்).

அந்த அளவிற்கு துணைவி என்பவள் நம் வாழ்க்கையில் நம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறாள் என்றால் அது மிகை ஆகாது.

ஒரு நல்ல குணமிகு மனைவி இருக்கும் குடும்பம் எப்போதும் கெட்டு போவது இல்லை. தனது கணவன் ஒழுக்கம் இல்லாமல் அப்படி இப்படி இருக்கும் குடும்பமும் இந்த உலகில் வாழ்ந்து தான் வருகிறது அனைத்தும் சகித்து கொண்டு பொறுமையுடன் வாழும் துணைவியினால்.

அன்பு, சகிப்பு தன்மை, பொறுமை, கடமை, தியாகம், தூய்மை போன்ற நற்பண்புகள் பெண்களின் குணம் என்றாலும் கூட அது மனைவி என்ற ஸ்தானம் வரும்போது இன்னும் அதிகமாகிறது.

ஒருவனை குடும்பத்தார் சொல்லி நம்பி யாரென்று தெரியாமல் மணமுடிக்கும் நேரத்தில் ஆரம்பமாகிறது அவளது தியாகம்.

என்றுமே நம்பிக்கையாகவும், கணவனை ஊக்குவிப்பவளாகவும் இருக்கும் பெண் மனைவியாய் கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் இந்த உலகில் ஏதும் இல்லை.

நாள் பொழுதும் உங்கள் நலனையே எண்ணி கொண்டு இருக்கும் உங்கள் மனைவிக்கு அவளின் பிறந்த நாளன்று இந்த மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை அனுப்பி மகிழச்செய்யுங்கள்.

மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

கணவன் தனது மனைவியிடம் எதிர்பார்க்கும் விதம் போலவே ஒவ்வொரு மனைவிக்கும் சொல்லப்படாத கனவவுகளும், ஆசைகளும் இருக்கும். உங்கள் மனைவியின் பிறந்த நாளும் முக்கியம் வாய்ந்ததே. அதற்கும் மதிப்பு அளியுங்கள் நான் பதிவிட்டு உள்ள இந்த மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை உங்கள் துணைவியை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்து மனைவியுடன் என்றுமே ஒற்றுமையாக சண்டையிடாமல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

இதுவரை தனிமையின் அவதியின் விளிம்பில் வாழ்ந்து வந்த என்னை மாற்றி மெல்ல மெல்ல பாசம் என்ற மெழுகினால் என்னை ஒளியேற்றினாய் என்றுமே உன்னை நான் மறவேன். உன் பிறந்த நாள் எனக்கு எப்பொழுதும் ஒரு இனிய திருநாள் தானே என் வாழ்நாள் மனைவியே

Flower

இதுவரை தனிமையின் அவதியின் விளிம்பில் வாழ்ந்து வந்த என்னை மாற்றி மெல்ல மெல்ல பாசம் என்ற மெழுகினால் என்னை ஒளியேற்றினாய்.

என்றுமே உன்னை நான் மறவேன். உன் பிறந்த நாள் எனக்கு எப்பொழுதும் ஒரு இனிய திருநாள் தானே என் வாழ்நாள் மனைவியே

அன்பிலே என் தாயாக பண்பிலே என் தந்தையாக திகழும் என் நேசமிகு மனைவிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

Flower

அன்பிலே என் தாயாக பண்பிலே என் தந்தையாக திகழும் என் நேசமிகு மனைவிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

இறைவன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன் உன்னை போல் ஒரு குணமிகு மனைவி எனக்கு கிடைத்ததில் இருந்து இனிய பிறந்த நாள் என் காதல் மனைவியே

Flower

இறைவன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன் உன்னை போல் ஒரு குணமிகு மனைவி எனக்கு கிடைத்ததில் இருந்து இனிய பிறந்த நாள் என் காதல் மனைவியே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.