விசும்பின் துளிகளாய் வயலில் உன் லீலை…
பசும்புல்லின் தலையாய் நிமிர்தல் நிமித்தமும்
பெய்யெனப் பெய்யாமல் ஏய்த்தல் நிமித்தமும்
ஏரின் உழாஅர் உழவர்
கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என எல்லாம்
மழையின் றமையா உலகின் ஒழுங்கு…
பெருமரத்தடியில் யாரும் அறியாது
வெடித்துக் கிளம்யதொரு காளான்குடையின் கீழ்
வானவில் தொட்டிலி லாடும் இந்த
மழைக்கு ஒதுங்கிய வானம்….