இன்று திருமணநாள் காணும் எனது மாமா மகளாகிய பானுவிற்கு என்னுடைய இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
காலங்கள் கரைந்தாலும் மாற்றங்கள் பல கண்டாலும் நீங்காமல் புரிதலில் ஒன்றிணைந்து, விட்டு கொடுப்பதில் வள்ளலாகி, தவறுகளை சரி செய்து கொண்டும் அன்பினை இருவரும் பகிர்ந்து கொண்டும் நீடூழி வாழ வாழ்த்துவதோடு இனிவரும் காலங்களில் உங்கள் வாழ்க்கையினை இனிமையான தருணங்களாக மாற்றி அமைத்திடுங்கள்…
இன்பத்தில் இணைத்து துன்பத்தில் தோள் கொடுத்து பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து உணர்வோடு ஒன்றாக கலந்து வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடும் மன மகிழ்வோடும் வாழ மனமார வாழ்த்துகிறேன்.*
என்றும் உங்களின் அன்பு
Ravanai Hussain