நொடிக்கு ஒரு முறை தான் இந்த இதயம் துடிக்கும். அந்த ஒரு நொடிக்குள் கூட பல முறை இந்த துடிக்கும் இதயம் உன் பெயரையே ஜபிக்கும்.
நாம் உயிர் வாழ சுவாசிப்பது காற்றை என்றால் என் இதயம் உயிர் வாழ நான் சுவாசமாய் நேசிப்பது உனது காதலை.
என்ன மாயம் செய்தாயோ தெரியவில்லையே உன்னுடைய கண்சிமிட்டும் வித்தையில் மயங்கி உன் முன்னே இன்று அடங்கி தானே போனேன் என்னவளே…
பார்வைகள் என்பது பார்ப்பதற்கு தானே என்றிருந்தேன் சில சமயம் பைத்தியமும் ஆக்கும் என்று அழகே உன்னை பார்த்த பின்பு தானே எனக்கும் புரிந்தது.
அன்பு கள்வனே காதல் என்ற ஒற்றை வார்த்தை தானே என் மனதில் நீ விதைத்தாய் இன்று இடைவிடா உன் நினைவுகள் என் இதயத்தில் மரமாகி என் உயிரில் கலந்து தீராத சுமக்க முடியாத சுகமான பாரமாக்கி விட்டாயே…
சிறைக்கைதிக்கு கூட அல்லவா விடுதலை உண்டு. ஆனால் காதல் என்ற ஒன்றுக்காக உன்னிடம் சிறைப்பட்ட என் மனதை நித்தமும் தீண்டி உன் பாச வலைகளில் மயக்க செய்து கொடுமையான இந்த சிறைத்தண்டனையை கூட இனிமையான கணங்களாக்கி என் மனதை குளிர செய்து விட்டாயே என் ஆருயிரே…!
இடைவிடாது பெய்யும் தீராத அடைமழையின் இடையே மரத்தின் நிழலில் தஞ்சம் புகுந்து என் மார்பின் மீது சாய்ந்து கொண்டு உன் இரு கைகளையும் என் இரு கைகளோடு இணைத்து நம் பார்வை மொழிகள் பேசிக்கொள்ளும் தருணத்தின் இடையே மழைத்துளிகளின் கீர்த்தனைகளும் சேர்ந்து இன்று உன்னுடன் நான் கழித்த அருமையான பொழுதை என்றுமே நினைத்து பார்க்கும் அளவிற்கு சுகமான நினைவுகளாக இந்த நாள் என்னில் நீக்கமற நிறைந்து விட்டது.
எவ்வளவு கோபங்கள் உன் மீது நான் கொண்டாலும் என் மனம் கவரும் உன் விழிகளை பார்த்து பேசும்போது உன் மீது கொண்ட வெறுப்புகள் கூட என்னுள் சிரிப்புகளாகி உன் முத்தத்தின் ஈரத்தில் நனைந்து முழுவதுமாக உன்னில் நான் கலந்து போய் விடுகிறேன்.
பார்க்காமல் போகாதே தென்றலாய் உன்னை தேடி வருவேன்! பேசாமல் இருக்காதே நினைவுகளில் நித்தமும் வந்து தினமும் சத்தம் போடுவேன்! பொய்யாக வெறுக்காதே நெருப்பாய் வந்து உன் அங்கம் முழுவதும் என் ஞாபக அனலை உன்னில் உமிழ்ந்து விடுவேன்! என்றுமே எனக்கே உரித்தானே உன் காதலைக்கொடு அது மட்டும் போதுமே இந்த ஆயுள் முழுவதும் உன் காலடியில் கிடந்து நம் காதலை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன்.
எனது வாழ்க்கையில் நான் கண்ட கஷ்ட நஷ்டங்கள் கூட என்னவளே உன்னிடம் மனம் விட்டு உரையாடும் மணிப்பொழுதில் அனைத்தும் நீ என்னோடு இருக்கும் தருவாயில் சமாளித்து விடும் திறனை என்னுள் நீ உட்புகுத்தி விடுகிறாயே…?