என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று இறைவன் நினைக்குறான் போலும் நான் ஆசைப்பட. நான் நினைத்தது எதுவுமே நடக்காது என்ற பிறகு என் ஆசைகளையும் நான் விட்டு விட்டேன் கல் மனதோடு.
வாழ்க்கையில் வலிகள் என்பது என்னை பொறுத்த வரையில் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதுமே. ஆசை என்ற உணர்வை மட்டும் அந்த இறைவன் தராமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை என்பது எனக்கு மிக எளியதாய் இருந்திருக்கும்.
கத்தியால் பிறரை காயப்படுத்தும் வலியை விட எனக்கு கொடுமையாய் படுகிறது போலியான பொய்யான வெளி உலகிற்காக மகிழ்ச்சியாய் இருந்து உள்ளூர மனதில் தனிமையில் தவிக்கும் என் மனநிலை.
இன்றைய காதல் என்பது உடல் பார்த்தும் நாம் உடுத்தும் உடைகளை பார்த்தும் மதிப்பிடும் அவ்வளவு தான். அழகு, திறமை என்ற குணங்களில் ஈர்க்கப்பட்டு வசதி,சொத்துமதிப்பு இருந்தால் காதல் முடிவு பெரும் திருமணத்தில்.
நான் இறந்தால் நான்கு நாட்கள் என்னை நினைத்து கண்ணீர் சிந்துவார்கள் அவ்வளவு தான். ஐந்தாவது நாள் அவர்களின் ஈடுபாடு அவரவர் வேலைகளில். இவ்வளவு தான் உலகம்.
இதுவரையில் என் நிலைமைக்கு யாரையும் நான் குறை கூறியது இல்லை. அனைவரும் நான் சோகமாக இருந்தால் சோகமாக இருக்க வேண்டும் நான் கண்ணீர் சிந்தினால் அவர்களும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை. ஆனால் என் சோகங்கள், ஆசா பாசங்கள், என் உணர்வுகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் கூட ஒரு உறவு என்னிடம் உரிமையாய் இல்லையே என்று நினைக்கும்போது தான் மிகவும் வலிக்கிறது என் மனது.
என் நண்பனுக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் இருப்பேன் முதலில். எனக்கு ஒரு கஷ்டம் என்றால் எவரும் இல்லை என் வழியில்.
நான் விரும்பும் காதலின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான் என்றும் என்னோடு இருக்கனும் துணையாய். அகங்காரம் இல்லாமல் என்றும் என்னோடு பேசணும் நிலையாய். இந்த சின்ன சின்ன ஆசைகளில் கூட எனக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
என்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என் காதலி வேறு ஒரு ஆண்மகனிடம் பழக கூட கூடாது என்று காதலில் நான் கருதுவதில் தவறு என்றால் அப்போது நான் அவளிடம் செய்யும் காதலே தவறுதான்.
அனைத்து உறவுகளும் நம்மிடம் எதையோ எதிர்பார்த்து தான் காத்து கிடக்கிறதே தவிர நம்மை எதிர்பார்த்து யாரும் காத்து கிடைக்கவில்லை. இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்தது தாயும் இதற்கு விதிவிலக்கல்ல.