நம் அன்றாட வாழ்க்கையிலே எந்த செயல்கள் செய்தபோதிலும் சிந்தனை செய்வது என்பது கட்டாயம் அவசியமாகிறது. நான்கு பேரிடம் எதை செய்தாலும் தீர விசாரித்து அலசி ஆராய்ந்து பிறகு முடிவு எடுப்பது என்றுமே நன்மை பயக்கும். இந்த பதிவில் வாழ்க்கை அனுபவம் பற்றிய சிறந்த சிந்தனை துளிகள், அறிவை வளர்க்கும் நல்ல பொன்மொழிகள், வாழ்க்கையின் தன்னம்பிக்கை கவிதைகள் மற்றும் படங்களை நீங்கள் படித்தும் ஷேர் செய்தும் பயன் பெறலாம்.
வாழ்க்கையின் சிந்தனை துளிகள் மற்றும் பொன்மொழிகள்
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்க போகிறது.
பழம் பெரும் ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும் கூட உன் வாழ்க்கையில் நீ கண்ட அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
பத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் அரைகுறையாக செய்வதை தவிர்த்து ஒரே வேலையை முழுமனத்தோடும் கருத்தோடும் செய்யலாம்.
பிரச்னை என்பது நீயே உனக்கான வலையை விரித்து மாட்டி கொள்ளும் செயல் போலவே அனுமதியில்லாமல் வருவது இல்லை. உனக்கான ஆபத்தை நீயே தேடி கொள்கிறாய்.
நீ என்றுமே எந்த விஷயத்திலும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடித்தாயேயானால் பல சிக்கல்களையும் ஆராய்ந்து எது சரி எது தவறு என்ற தீர்வை தரும்.
எதை இழக்கும் நிலைக்கு நீ தள்ளப்பட்டாலும் உன் பொறுமையை இழக்கும் நிலைக்கு மட்டும் வந்து விடாதே. நீ இழந்தது எல்லாம் நிற்சயம் கிடைக்கும் பொறுமையின் வழியே நீ முயற்சி செய்தால்….!
மாற்றங்கள் என்ற ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இங்கு நிறம் மாறும் பச்சோந்திகள்…! மனம் மாறும் தந்திரர்கள்…!
காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை. ஆனால் கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் நீ தேடி விடாதே. உன் தேடல்களில் அவர்கள் இல்லை என்று நினைத்துக்கொள்.
உன் முயற்சி மீது நீ கொண்ட நம்பிகை மட்டுமே பின்னாளில் உன் திறமைகளை அங்கீகரிக்கவும் உன் வெற்றிகளை கௌரவிக்கவும் போகிறது.
இலக்கு பெரியதாக இருக்கும் போது உன் மன வலிமை, பொறுமை, திட்டமிடும் தன்மை, சமயோஜித சிந்தனை, தன்னம்பிக்கை என இவை அனைத்துமே உன்னில் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
சிறந்த வாழ்க்கை கவிதைகள் மற்றும் படங்கள்
சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட எதை செய்யும் முன்னரும் அதனால் கிடைக்க பெறும் நன்மையையும் தீமையையும் நீ சிந்தனை செய்வாயேயானால் உனக்கான சிறந்த முடிவை நீயே அறிந்து கொள்வாய்.
அனைவர்க்கும் இனிமையாக இருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது மாறாக அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்.
ஒரு அறிவாளி என்பவன் என்றுமே முட்டாள்களுக்கு மத்தியில் தான் சொல்வது சரியே என்று தர்க்கம் செய்து கொண்டிருக்க மாட்டான்… வீண் வாதங்கள் என்றுமே வாழ்க்கைக்கு நன்மை பயப்பது இல்லை.
தவறை நீ செய்தால் ஒத்துக்கொள்விரைவில் சரி செய்து கொள்ளலாம்… ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று நிரூபிப்பவர்களை என்றுமே சரி செய்ய முடியாது…
நாய்க்கு இல்லை ஆறாவது அறிவு ஆனால் அதற்கு உண்டு நன்றி உணர்வு… பகுத்தறிவு உள்ள நம்மில் பலருக்கும் என்னவோ சிறிதும் இல்லை அந்த நன்றி உணர்வு…
இறைவன் உன்னை ஏழையாக படைத்திருக்கலாம் ஆனால் உனக்கு சிந்திக்க அறிவு என்ற ஒன்றை கொடுத்திருக்கிறான் அல்லவா…! அதுவே உன்னுடைய மூலதனம் அதை வைத்து முன்னேறு…
வாய்ப்புகள் என்பது எப்போதும் அமைவது இல்லை உனக்கான நேரம் வரும்போதோ அல்லது சந்தர்ப்பம் அமையும்போது கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி முன்னேறுபவனே இங்கு சாமர்த்தியசாலி ஆகிறான்.
நாளை எல்லாம் மாறும் என்று உனக்குள்ளே ஆறுதல் சொல்வதையும் வீண் கனவு காண்பதையும் விடுத்து இன்று என்ற இந்த நிஜ உலகினில் உன் முயற்சியை கையாள பழகிக்கொள்.
உலகில் நடக்கும் அனைத்து சாதனைகளும் பல சமயம் பற்பல சோதனைக்கு உட்பட்டிருக்கும் எனவே எந்த ஒரு தோல்வியும் உன்னுடைய வருங்கால வெற்றிக்கான அறிகுறியே.
எந்த செயல் செய்தபோதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்… உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருந்தால் கூட இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம் வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்…