சிறந்த வாழ்க்கை தமிழ் கவிதை வரிகள்
உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…
நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!
எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!
உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…
நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.
முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…
வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…
வாழ்க்கை தத்துவம் புதிய வாழ்க்கை கவிதைகள்
இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…
சரி தவறு எது என்று ஆராய்ந்து இங்கு முடிவு எடுப்பவர்களை விட எது அவரவர் வாழ்க்கைக்கு உகந்தது என்று அனுமானித்து முடிவு எடுப்பவர்கள் தான் இங்கு மிக அதிகம்.
காயங்கள் பல பட்ட மனதுக்கு சில சமயம் கண்ணீரும் ஆறுதல் தரும், பிரிவுகளும் அமைதியை கொடுக்கும்.
எந்தன் வாய் வார்த்தைகளில் பொய்கள் இருக்கலாம் ஆனால் இதயத்தில் அடங்கியுள்ள நினைவுகள் என்றுமே பொய் ஆகாது …
வாழ்க்கை என்றுமே இனிக்கும் இனிப்பை போல தான் அதை ரசித்து சுவைக்க உனக்கு நன்கு தெரிந்திருந்தால்…
எந்த காரியமும் ஒரு தலை பட்சமாக செய்யாதே.. அனைவரின் கூற்றிலும் அவர் தரப்பு நியாயம் இருக்கும்.. ஆதலால் கூர்ந்து ஆராய்ந்து சிந்தித்து செயலில் காட்டு…
நம்பிக்கை மற்றும் வெற்றிப்பாதைக்கான முன்னேற்றக்கவிதை
மனதின் பாரங்கள் பனி போல விலக வேண்டுமென்றால் நம் கண்ணீர் துளிகளை விலை கொடுத்து தான் ஆக வேண்டும்…
காத்திருந்து காலம் கடத்துவதை விட அந்த காலத்திருக்கே போட்டியாக நம் செயலில் கவனம் செலுத்தி காலத்தை வெல்லலாம்…
வாழ்க்கை என்னும் கவிதை எளிதில் புரிவது இல்லை தான்… வெற்றி என்பதை அடையும் போது தான் என்னவோ அதன் பொருளை உன்னால் ரசிக்க முடிகிறது…
பிறர் இதயத்தை வெல்வதற்கு அதிக செலவு எல்லாம் இல்லை நல்ல குணம் இருந்தாலே போதும் …
வாழும் வாழ்க்கை என்பது நமக்கு நாமே வகுத்த நெறிமுறை அதன் பக்கங்கள் எல்லாம் எல்லை இல்லாத வரையறை.. எனினும் சில சமயம் நமக்குள்ளே வகுத்து கொள்கிறோம் ஒரு சில விதிமுறை…
நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
பிற பயனுள்ள பதிவுகள் உங்களுக்காக …
- சிறந்த அந்தி மாலை பொழுது வணக்கம் வாழ்த்துக்கள், தமிழ் கவிதை வரிகள், படங்கள்(Opens in a new browser tab)
- இனிய காதல் கவிதைகள் 2019(Opens in a new browser tab)
- சிறந்த மதிய வணக்கம் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை வரிகள் மற்றும் புகைப்படங்கள்(Opens in a new browser tab)
- காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள்| Tamil Love Feeling Images(Opens in a new browser tab)
- புத்தம் புதிய அழகிய தமிழ் கவிதைகள்(Opens in a new browser tab)