அனைவர்க்கும் வணக்கம் இன்று நான் வடித்த கவிதைகள் முழுக்க முழுக்க வாழ்க்கை பற்றிய தேடல்கள் மற்றும் மாற்றங்கள் பற்றி. இந்த தமிழ் கவிதைகள் கண்டிப்பாக எல்லா தரப்பினருக்கும் பொருந்தும் என
நினைக்கிறன். மேலும் இந்த பதிவில் உள்ள கவிதை வரிகள் அனைத்தும் உங்களை ஊக்குவித்து அவரவர் முயட்சிகளின் வழியே வெற்றிக்கனியை நிச்சயம் நீங்கள் செய்யும் செயல்களில் அடைய ஒரு உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறேன்.
Thoughts in Tami | சிறந்த தமிழ் கவிதை வரிகள்
இங்கு பல பேர் செய்யும் முட்டாள்தனம், கஷ்டங்களை நினைத்தே வாழும் வாழ்க்கையை கடத்துவது … அதனால் வாழ்வில் கிடைக்கும் சின்ன சின்ன இன்பத்தை கூட அனுபவிக்காமலேயே வாழ்கிறோம் இந்த உலகில் …
போராடி பழகும் வித்தையை முதலில் உன் மனதுக்கு கற்பித்துப் பார். அது தரும் வலிமை உன்னை கொண்டு செல்லும் வாழ்க்கையின் வெகு தூரத்துக்கு…
யாருக்கும் இங்கு நல்லதே நடந்து கொண்டு இருப்பது கிடையாது. கெட்டதே தான் வாழ்க்கையும் ஆகாது. நாம் அணுகும் அணுகுமுறையும் சிந்தனையும்தான் எதையும் தவறாகவே என்னும் எண்ணத்திற்கு காரணம்.
அனைவருக்குள்ளேயும் இங்கு திறமை போதும் என்ற அளவிற்கு பொதிந்து கிடக்கிறது. அதில் எவர் ஒருவர் மற்றவரை விட வித்தியாசம் காட்டி வெற்றி பெற போகிறார் என்பதில் தான் உள்ளது உன் திறமைக்கான அடையாளம்.
உன் சிந்தனை நேர்மையாக இருந்தால் உன் மனது தூய்மையாக இருந்தால் நீ எடுக்கும் முயற்சி முறையாக உனக்கு பயனளிக்கும்..
உலகம் என்பது ஓடும் நீரோடை போல தான் எப்போதும் ஓடி கொண்டே தான் இருக்கும், உன் ஒருவனுக்காக அது காத்திருக்காது. நீ தான் உனக்கான வழியை கடக்க அதில் பயணம் செய்ய வேண்டும்.
முயற்சி தோல்வி வெற்றி பற்றிய கவிதைகள்
நாய் தன்னை பார்த்து குரைக்கின்றது என்று ஒரு போதும் சூரியன் பிரகாசிக்க மறுப்பது இல்லையே…! அது போலவே உன் வாழ்க்கையில் நீ செழிக்க உன்னை தாழ்த்தும் யாரையும் நீ சட்டை செய்யாதே…!
வெற்றிக்கு உரித்தான குணம் என்றும் தன் நிலையில் இருந்து விலகாமல் மேற்கொண்ட லட்சியத்துக்காக போராடும் ஒரே மனம்.
சின்ன சின்ன உதவியை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் எந்த செயலுக்கும் நம்பிக்கை என்ற ஒன்றை நிற்சயம் உன்னில் இருந்தே தொடங்க வேண்டும்.
முயற்சியே செய்யாமல் நீ கவலை கொள்வது உன் மூடத்தனம். உனக்கான தோல்விக்கு நீ பொறுப்பெடுக்காமல் அடுத்தவரை கை காட்டுவது உன் அறியாமை.
முறையான பயிற்சி செய்து போராடினால் நீ வெற்றி பெறுவாய். பாசாங்கு செய்தால் நீ தோல்வியை வெற்றியாக பெறுவாய்.
நாம் அனைவரும் உலகம் என்ற மாய வலையில் பயணிக்கும் பயணிகள் தான். அதில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம் மாற்றங்களை தேடி மாற்றங்கள் என்றுமே மாறாது என தெரிந்தும்.
என்று நீ உள்ளப்பூர்வமாக நிராகரிப்புகளை உணர்கிறாயோ அன்று உன்னை உனக்கே உன் மனம் அடையாளம் காட்டும். வாழ்க்கை கற்று தரும் பாடத்தை உனக்குள்ளே நீ உணர்வாய்.
ஏமாற்றங்கள் என்றுமே உன்னை பலவீனப்படுத்துவதற்காக அல்ல. நீ செய்த தவறுகளை சுட்டிகாட்டி உனக்கான வாழும் வழிமுறைகளை கற்று தந்து உன்னை பலப்படுத்தும் ஒரு சிறந்த ஆசான்.
நிதானம் நேரமானாலும் பாதை மாறாது. உன் லட்சியம் வெல்லும். கோபம் உனக்கான தவறான வழியை சரியாக காண்பித்து நேரம் வரும் வேளையில் உன்னை வீழ்த்தும் துரோகி.
வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் கவிதை வரிகள் படங்கள்
நீ பிறக்கும் போதே உனக்கான ஒரு வரலாறு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை நீ சரித்திரம் ஆக்குவதும் சமாதி ஆக்குவதும் உனது கையிலே…!
நான் தோல்வி கண்டேன் என்று சொல்லாதே மாறாக வெற்றியை பற்றி தோல்வியால் கற்று கொண்டேன் என்று சொல்லி பழகு.
நீ எண்ணும் எண்ணங்களை உயர்வாக முன்னிறுத்துவது நீ போட்டியிடும் உன் சமமான எதிரியை விட ஒரு படி மேலே உள்ளாய் என அர்த்தம்.
உறவுகள் வேண்டுமா? நாவை அடக்கி ஒன்றுக்கு பல முறை யோசித்து பேசுங்கள் … சொற்களுக்கு மட்டுமே அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வலிமை உண்டு.
ஒருவரின் உண்மையான மதிப்பு என்பது அவர் கொண்ட அறிவில் தான் இருக்கிறதே தவிர அவர் சேர்த்து வைத்திருக்கும் பொன்னோ பொருளிலோ அல்லவே …!
நீ வாழும் வாழ்க்கைக்கு தேவைப்படும் காரணிகள் நேர்மையான குணம், தயாள மனம், எதையும் செய்ய தயாராகும் மனோபலம்.
உன் வைராக்கியத்தை மனதில் வைத்து முயட்சியை செயலில் வெளிக்கொணர். வெற்றி என்ற ஒன்று நிற்சயம் ஒருநாள் உன் விலாசம் தேடி ஓடி வரும். உனக்கான தேவைகள் நிற்சயம் அன்று பூர்த்தியடையும்.
அன்பையும் பாசத்தையும் காட்டுகிறவர்கள் எல்லோரும் உன்னை முழுமையாக விரும்புகிறவர்கள் அல்ல. சில பேர்களின் காரியங்களுக்காக நீ தேவைப்படலாம் தக்க சமயத்தில் அவர்களின் நிஜ குணங்களை நீ அறிவாய்…!
தேவைகளால் வருவது அன்பு அல்ல … தேவைப்படுவதால் வரவடிக்கப்படுவது பாசம் அல்ல. நிஜமான அன்பும் பாசமும் நீ தேடுவதில் கிடைப்பது இல்லை. அப்படி கிடைத்தால் அது நிஜமாய் நிலைப்பது இல்லை.
திறமையை என்றுமே செலவழிக்க தயங்காதீர்கள்… எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் திறமை ஒரு இடத்தில் வெளிப்படுகிறதோ அதை பொறுத்தே உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுகளும் தரப்படும்.
மாற்றங்கள் மற்றும் ஆறுதல் தமிழ் கவிதை
வாழும் காலம் வரை புரிந்து கொள்ள முடியாதது தான் மாற்றம். உன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கூடவே வரும் இந்த மாற்றங்கள். அதை தெரிந்து வாழ பழகிக் கொண்டால் தான் இந்த உலகம் என்ற சவாரியில் உன்னால் பயணப்பட முடியும்.
எல்லா காரியங்களுக்கும் முடிவு என்பதை காலதேவன் கட்டாயம் வைத்திருப்பான். மனிதர்கள் அம்முடிவில் தான் நினைத்தது நடந்தால் திருப்தி அடைகின்றனர். பாதகமானால் அதிருப்தி ஏற்பட்டு அநீதியாக உணர்கின்றனர். நீதி நியாயம் தர்மம் எல்லாம் இரண்டாம்பட்சம் …
உன் உழைப்பினால் கிடைக்கும் வியர்வைத்துளியும் உன் வேதனையின் கண்ணீர் துளிகளும் விலை மதிப்பில்லாதது. அதை நீ வீணடித்து விட்டு பின் வேதனைப்பட்டு விடாதே…!
நீ அடைய நினைக்கும் இலக்கு முழுமை அடையாவிட்டால் கூட நீ எடுக்கும் முயற்சிகள் உண்மையாக இருந்தால் உன் மனம் உண்மையாக அந்த செயலுக்கு வெற்றி பெற்றது போல நினைத்து முழுமை அடைந்து விடுகிறது.
ஒவ்வொரு இருளின் முடிவிலும் ஒரு முழுமையான ஆதவன் பிறக்கிறான். அது போலவே நீ எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளின் பிரதிபலனாக வெற்றி ஒருநாள் உன் வாழ்வில் நிற்சயம் உதயமாகும்.
உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டே இரு. இறந்த பின் நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டே இருக்கலாம். அது வரை உன்னை அறிமுகப்படுத்தும் இந்த உலகிற்கான தேடல் முழுமை அடையும் வரை போராடலாமே …?
புன்னகைத்து கொண்டே இரு எது நடந்தாலும்..!புன்னகை வலிகளை அகற்றும், புன்னகை மாற்றங்களை உன்னில் விளைவிக்கும். புன்னகை கண்ணீரையும் தனக்குள் கரைக்கும். மொத்தத்தில் எது வந்தாலும் போனாலும் மகிழ்ச்சியாய் நீ இருந்தால் மனதில் அமைதி என்னும் தென்றல் வாழ்வில் எந்நாளும் வீசும்…!
மேலும் சுவைக்க …
மனதை தொடும் தமிழ் கவிதைகள் | Tamil Kavithai Images(Opens in a new browser tab)
தன்னம்பிக்கை துளிகள்(Opens in a new browser tab)
புத்தம் புதிய அழகிய தமிழ் கவிதைகள்(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)