ஹைக்கூ இரு வரி காதல் கவிதைகள் -1

ஹைக்கூ காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள்

காதல் உறக்கம்

உன்னை நினைத்து நான் உறங்கினால் கூட அந்த உறக்கமும் எனக்கு சுகம் தான் ஏனெனில் நீ தான் என் கனவில் வருவாயே.

காதல் துடிப்பு

உன் இதயத்துடிப்பை விட அதிவேகமானது உன்னையே ஒவ்வொரு நிமிடமும்  எண்ணி துடிக்கும்  என் காதல் துடிப்பு.

உன்னை நினைத்து

ஒரு நாளும் உன் நினைவிற்கு  என்னிடம் விடுமுறை இல்லை.நான் இறைவனை வேண்டுவது ஒன்றே ஒன்று தான். என்றும் உன்னை மறக்காத வரம் வேண்டும். நீ என்றுமே என் துணையாக வர வேண்டும்

 என் காதல் இதயம்

பாறையில் நான் செதுக்கிய உன் பெயரை எவ்வாறு சிதைக்க முடியாதோ அதே போல் தான் என் இதயத்தில் குடியேறிய உன்னை என்னால் அழிக்க முடியாது.

காதல் வலி

உன் இதயம் துடிக்கும் போது ஒவ்வொரு முறையையும் கேட்டுப் பார். என்  வலியை அது சொல்லும். என் பிரிவை உன் மனம் உணரும்.

உன்னை பார்க்கும் போது

உன்னை பார்க்கும் போது உன் கண் இமைகளில் நான் தெரிந்தேன். என் இதயம் கொள்ளை போனதை உணர்ந்தேன். என் மனதை நீ பறித்ததை அறிந்தேன்.

என்னை பிரிந்து விடாதே

நான் உன்னை பார்க்காத போது நீ எங்கு என்று என் கண் இமைகளை தேட வைக்கிறாய் நீ. உனக்கே தெரியாமல் உன் உயிரில் கலந்து விட்டேன் என்னை பிரிந்து விடாதே.

இதயத்தில் நீ

கண்களில்  என் கண்ணீர் உள்ளது. அந்த கண்ணீரில் என் உயிர் உள்ளது. அந்த உயிரில் என் இதயம் உள்ளது. அந்த இதயத்தில் நீ உள்ளாய்.

செவிகளில் இன்பம்

செவிகள் இன்பப்படுகிறது உன்னை பார்க்காத போதும் உன் குரலை நான் என் அலைபேசியில் கேட்பதால் செவிகள் இன்பப்படுகிறது.

உன்னை நேசிக்கும் மனது

உன்னை நேசிக்கும் மனது ஒன்றினாலே உன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் நீ விலகி இருந்தாலும். உன்னை நேசிக்காத மனதால் நெருங்க கூட முடியாது உன் அருகில் இருந்தாலும்.

என் துணையாய்

சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் நீ வேண்டும் என் துணையாய். நரகத்தில்  வாழ்ந்தாலும் நீ வேண்டும் என் துணையாய். கல்லறையில் வீழ்ந்தாலும் கூட  நீ மட்டுமே வேண்டும். அங்கும் என் துணையாய் நான் உன் துணைவியாய்.

சமிக்ஞை மொழி

நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு கணமும் உன் விழிகள் என் விழிகளை சமிக்ஞை மொழியாய் காந்தம் போல என்னை இழுக்கிறது.

தேடி வரும் உயிருள்ள காதல்

உயிர் இல்லாத காதல் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம். உயிர் உள்ள காதல் எப்போது பிரிந்தாலும் உன்னைத்தான் தேடி வரும்.

நினைக்க மறந்தால்

அன்பே உன்னை நினைக்க மறந்தால் ஏனோ நெஞ்சம்  என்னை வலியுறுத்தி நினைவுறுத்துகிறதே.

நான் எப்போதும் உன்னுடன்

நான் வசிக்க  உன் இதயத்தின் ஏதோ ஓர் மூலையில சிறிய இடம்  தருவாயா. நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பதற்கு.

கண்களில் நீ

என் கண்கள்  கூட உன்னை பார்க்கும் போது அசைய மறுக்கிறது உன்னை பார்த்ததும் எனக்குள் ஏற்பட்ட பரவசத்தினால்.

பேருந்து காதல் பார்வை

பேருந்து  விட்டு இறங்கும்போது என் விழிகளுக்கு தெரியாது அந்த நாளில் உன்னை நான் பார்க்கும் கடைசி “பார்வை” அது தான் என்று.

கூண்டில்  அடைப்பட்ட கிளி போல்

அந்த நாட்களில் நான் என் வீட்டின் சன்னல் அருகில் இருந்து கொண்டு கொல்லைப்புறமாக உன்னை பார்க்கும் போது தோன்றும் ஏனோ  கூண்டில்  அடைப்பட்ட கிளி போல வெளியே வர தத்தளிப்பேன் உன்னை பார்க்க நான் துடிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.