எனது அன்பான வாசகர்களின் கனிவான கவனத்திற்கு,
என் அலுவலக பணிகள், குடும்ப சூழ்நிலை மற்றும் பல இதர காரணங்களால் என்னால் கவிதைகளை எழுத்து வடிவில் மட்டுமே பதிவிட முடிகிறது மன்னிக்கவும்.
Table of Contents
பறவை போல்
பறவை போல் சிறகு அடித்து சுதந்திரமாக விண்ணில் செல்ல ஆசை உன்னுடன்.
மெழுகுவர்த்தி
இரவாகி போன என் இதயத்தில் வெளிச்சமாக வந்த மெழுகுவர்த்தி நீ வெளிச்சமாக வந்த நீ உருகி உருகி மீண்டும் என் இதயத்தை இரவாக்கி விடாதே.
உன் விழி என்னும் சாவி
என் விழிகளை பூட்டு போட்டு பூட்டினாலும் உன் விழி என்னும் சாவியை கொண்டு திறந்து விடுகிறாய்.
என் இதயம்
நீ வந்து என் இதயத்தில் வசித்ததால் என் இதயம் இன்பப்படுகிறது.
உன் பெயரை எழுதும்போது
உன் பெயரை பேனாவில் எழுதும்போது தயங்குகிறேன் ஏனென்றால் என் பேனாவின் முனை உன்னை குத்துகிறது என்று.
மரங்களின் தோள்கள்
நீ நம் பெயரை என்றும் நிலைக்க மரங்களில் செதுக்குவதால் பாவம் மரங்களின் தோள்களுக்கு வலிக்க போகிறது.
இதயத்தை விட்டு
உன் இதயத்தை சென்று சுற்றி பார்த்த பின் உன் இதயத்தை விட்டு என்னால் வர முடியவில்லை
உன்னை மறந்தால் என் மரணமே
உன்னை சுவாசித்த என் மூச்சிற்கு சிறிதும் மறக்க தெரியவில்லை. உன்னை மறந்தால் நிகழ்வது மறுகணம் என் மரணமே.
காதலுக்கு முடிவு இல்லை
உன் நினைவிற்கு எல்லை இல்லை. உன் நட்பிற்கு பிரிவு இல்லை. நம் காதலுக்கு முடிவு இல்லை.
கடிகாரம்
கடிகாரத்தை காக்க நொடி முள் உள்ளது. நம் காதலை காக்க நாடி முள் உள்ளது.
இமைகள்
இமைகள் பிரிவது பார்வைக்காக. இதழ்கள் விரிவது மலருக்காக. கதவுகள் திறப்பது தென்றலுக்காக. நான் பிரிவது எதற்காக?
நினைவுகள் மறையாது
உந்தன் நியாபகம் என்னுள் அழியாது. உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது.
சுவாசம்
நீ எப்போதும் என்னுள் சுவாசமாக இரு. நீ இல்லையென்றால் நானும் இல்லை.
காதல்
காதல் என்பது செடியில் பூக்கும் பூ போல் அல்ல அது உதிர்வதற்கு.
விண்மீன் போன்று என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
என்னை விட்டு பிரியாதே
நீ என் கனவில் வரும்போது கலையாதே. நிஜத்தில் இருக்கும் போது
என்னை விட்டு பிரியாதே.
கனவு
கனவில் பிரிந்தோம். நினைவு என்னும் நிஜத்தில் வாழ்வோம் உயிர் உள்ளவரை.
நட்பும் காதலும்
பார்த்து பேசி வருவது நட்பு. பார்க்காமல் புரிந்து கொண்டு வாழ்வது காதல்.
கல்லறை
நம் இருவரும் இதயம் எனும் கல்லறையை அடைந்தோம். அதை திறக்க மனது எனும் சாவியில் நுழைந்தோம்.
நிலையான ஒன்றே காதல்
பூ என்று இருந்தால் என்றாவது உதிர்ந்து தான் போகும். மனிதன் என்று இருந்தால் என்றாவது இறந்து தான் போவான். ஆனால் காதல் என்ற ஒன்று மட்டுமே இந்த பூமியில் நிலையான ஒன்று.
ஒரு நொடி போதும்
துன்பத்தை நினைப்பதற்கு யுகங்கள் போதாது. இன்பத்தை நினைப்பதற்கு ஒரு நொடிகள் போதும்.
தொலைந்த பேனா
தொலைந்த பேனாவை தொலைத்தது போல் இதயத்தை தொலைத்தேன் உன்னிடம்.
பூக்கள்
மலர்ந்த பூக்களை பறிக்காதே. பிரித்த பூக்களை வாட விடாதே.
வாடிய பூக்களை உத்திர விடாதே. உதிரிய பூக்களை மிதிக்காதே.
காதல் தோல்வி
காதலை நேசிப்பவன் காதல் செய்து கொண்டிருப்பவன். காதலை வெறுப்பவன் காதலில் தோல்வி அடைந்தவன்.
ஆயிரம் முறை
அன்பே ஆயிரம் முறை தினம் உன்னை நினைப்பேன். ஒரு முறையாவது உன்னை மறக்க நினைத்து இருக்க மாட்டேன்.
மனதின் எண்ணம்
உன் மனதின் எண்ணத்தை புரிந்து கொள்ள ஒரு நிமிடம் போதும் எனக்கு நீ பார்க்கும் ஒற்றை பார்வையில்.
உன்னை பிரிய முடியாது
உன்னை என்றுமே பிரிய என்னால் முடியாது. நம் காதலை பிரிக்க அந்த இறைவன் நினைத்தாலும் இயலாது.
நீ வேண்டும்
பிரியாத காதல் வேண்டும். வாடாத மலர்கள் வேண்டும்.உதிராத நட்பு வேண்டும். பயப்படாத நெஞ்சம் வேண்டும்.கலங்காத மனம் வேண்டும். எனக்குள் நீ வேண்டும். உன் உயிருக்குள் நான் இருக்க வேண்டும்.