Table of Contents
என் தலை எழுத்து
நீ என்பது ஓரெழுத்து. நான் என்பது இரண்டெழுத்து. காதல் என்பது மூன்றெழுத்து. உன் பின்னால் திரிவது என் தலை எழுத்து.
என் இமைகளில்
நான் ஒரு முறை என் இமைகளை திறப்பதற்குள் நூறு முறை விழுந்து
விடுகிறாய் என் இமைகளில் “நீ” .
வானமா பூமியா
இது வானமா? பூமியா? வந்து விட்டது சந்தேகம். வானவில்லாய் நீ வந்த போது.
தென்றலாய் அவள்
தென்றலாய் அவளை கண்டதும் மனதுக்குள் உருவானது காதல் புயல்
உள்ளம் உள்ள காதல்
முகத்தை பார்த்து வந்த காதல் முடிந்து விடும். பணத்தை பார்த்து வந்த காதல் பறந்து விடும். உள்ளம் பார்த்து வந்த காதல் உயிர் உள்ளவரை அழியாது.
பொய்யாக கூட கோபப்படாதே
நீ என்னிடம் பொய்யாக கூட கோபம் கொண்டு விடாதே. அதை கூட என் இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
காதல் கண்கள்
காதலர்களின் உதடுகளை விட கண்கள் தான் மிக அதிகமாக பேசும்.
அவள் என் உயிர் மூச்சு
சில உறவுகள் புன்னகை போல எப்பாவது வரும். சில உறவுகள் மூச்சு மாதிரி எப்போவும் கூடவே இருக்கும் உன்னை போல.
திருமணம்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. வாழ்ந்தால் சொர்க்கம் வீழ்ந்தால் நரகம் வாழ்வதும் வீழ்வதும் நம் இருவர் கையில்.