🌒- நிலா

🌒- நிலா

🌒
நீங்காத நினைவுகளை என் நிழல்கொடியால் தந்திருந்தால் – இன்று
நீள்மௌன இராத்திரிகள் என் நின்மதியை கொள்கிறதே
பேதை நீ பெரும்கவியோ உனை புறிய எனக்கு நெறி இல்லையோ- என்னுள்
கோதை நீ இல்லை எனில் என் வாழ்வு கொடுங்கோல் இராட்சியமோ
சீதை நீ என்பதனால் சிதைகின்றேன் இராவணனாய் – நான்
இராட்சசன் ஆயினும் எனக்கு சிறுமோட்சம் தாராயோ
மேதை நீ என அறிந்தும் என் பாமர மனம் ஏங்கறதே – ஏனோ
பட்டினியாய் நான் இருந்தும் உன்நினைப்பில் பரிதவித்து வேகிறதே
ராதையே உன் அமைதி விண்மதி எங்கும் ரணப்பாதை – என்றும்
கீதையும் கிறுக்கல் என உன் நினைவுகள் தான் என் போதை…………..

nila…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.