அந்தி நேர சூரிய செந்தழலின்..
நிறத்தை புடவையென மடிந்து..
அனல் காற்றும்
பூங்காற்றும் வீசிடும்
உன் கரு விழியோரமாய்..
கார் இருட்டின் மை பூசி
நிலவென முக வெளிச்சம் காட்ட
சிறு நட்சத்திரமாக ஜொலிக்குதடி
உன் புன்னகை
பாவை உந்தன் தோடும்.. ஜிமிக்கியும்
உன்னை தொட ஆடி!!! ஏங்கி!!!
சிற்றொலி எழுப்பி அழுகிறதோ???
நுதலின் நெற்றி நடுவே
உன்னை இறுக அணைத்து
விலக மறுத்து நிற்கும்
சிறு பொட்டும்.. ஆஹா…
நீந்த தெரியாமல் தவிக்கும்
சிறு மீனுமாய் உன் கண்கள்
எனை பார்க்கும் நொடியில்..
உன் செவ்விதழின் புன்சிரிப்பில்
நிறம் மாற கணம் தேடும்
உனது கன்னங்கள் கண்டு நான் வியர்க்க
கார் மேகமே வியக்கும்
பதுமை இவளின் கூந்தலில்
விழுந்து!!! மறைந்து!!!
சிக்கி தவிக்கிறேன் நானோ..
அரிவை அவளை பேதையென
அள்ளி அணைத்து
முத்தமிட துடிக்கும் நொடிதனிலே
மனம் ஏனோ ஏங்கி தடுமாறும்
மடந்தை அவள் உடல் வனப்பில்
ஆழ்கடலில் கண்டெடுத்த சங்கான
அவள் கழுத்துதனில்
தவழ்ந்தோடும் அணிகலனை கண்டு
பொறாமையின் உச்சியில் எழுதும்
வார்த்தை தான் கவிதையோ?
நான் தான் கவிஞனோ?
நீயே சொல்.
– கிறுக்கல் கவிதை