உயிர் நட்பு தோழி தோழன் நண்பர்கள் கவிதைகள்-Friendship Kavithaigal

உயிர் நட்பு, தோழி, தோழன், நண்பர்கள் கவிதைகள்,Friendship Kavithaigal

பார்த்ததும் பால் உணர்வுகளால் தூண்டப்பட்டு வரும் காதலை போல அல்லவே நட்பு. பார்த்த நாள் முதல் இந்த ஆயுள் காலம் முடியும் வரையிலும் நட்பு என்பது ஒரு பிரிக்க முடியாத பிணைப்பாக இருக்கும் ஒரு காலமும் அழியாமல்.

"டேய் வாடா மச்சா" - என்று உரிமையோடு கூப்பிடும் நண்பனின் குரல் வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உரிமையோடு உன்னிடம் உறவாட நினைக்கும் ஒரு உண்மையான ரத்த பந்தம் இல்லாத நிலையான சொந்தம்.

“டேய் வாடா மச்சா” – என்று உரிமையோடு கூப்பிடும் நண்பனின் குரல் வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உரிமையோடு உன்னிடம் உறவாட நினைக்கும் ஒரு உண்மையான ரத்த பந்தம் இல்லாத நிலையான சொந்தம்.

இந்த உலகில் அனைவருமே மன அழுத்த நோயாளிகள் தான் நண்பன் என்பவன் இல்லாவிடில்.

இந்த உலகில் அனைவருமே மன அழுத்த நோயாளிகள் தான் நண்பன் என்பவன் இல்லாவிடில்.

நம்முள் இருக்கும் திறமைகளை சிறந்த வழியே வெளிக்கொணர நம் ஸ்நேகிதனை தவிர சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

நம்முள் இருக்கும் திறமைகளை சிறந்த வழியே வெளிக்கொணர நம் ஸ்நேகிதனை தவிர சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

சிறு பிள்ளைகளாக இருக்கும்போதிலிருந்து பால்ய வயதை எட்டி முதுமை பெறும் வயது ஆனாலும் உறவில் சிறிதும் மாறுபாடு இன்றி அன்றில் இருந்து இன்று வரை மாறாது இருப்பது நட்பு என்ற ஒன்று மட்டுமே.

சிறு பிள்ளைகளாக இருக்கும்போதிலிருந்து பால்ய வயதை எட்டி முதுமை பெறும் வயது ஆனாலும் உறவில் சிறிதும் மாறுபாடு இன்றி அன்றில் இருந்து இன்று வரை மாறாது இருப்பது நட்பு என்ற ஒன்று மட்டுமே.

உரிமையாக பேசுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, எதிர்பார்ப்புகள் இன்றி பழகுவது, குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அன்பினால் அளவளாவி மகிழ்வது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் நட்பான உறவில்.

சூரியனின் வெயிலும் சந்திரனின் நிழலும் பூமியை காப்பது போல உன் அன்பின் கருணையினால் நீ என் வாழ்க்கையையே சீராக்கி விட்டாய் என் ஆருயிர் தோழியே.

சூரியனின் வெயிலும் சந்திரனின் நிழலும் பூமியை காப்பது போல உன் அன்பின் கருணையினால் நீ என் வாழ்க்கையையே சீராக்கி விட்டாய் என் ஆருயிர் தோழியே.

பெற்ற தாயாக இருந்தாலும் இடைவெளி இருக்கும் சில சொல்ல முடியாத விசயங்களில். ஆனால் மனதில் தோன்றுவதையும் நம் காதல் விஷயங்களையும் கூட விருப்பமாக சொல்லலாம் தோழி,தோழனிடத்தில் உரிமையாய்.

பெற்ற தாயாக இருந்தாலும் இடைவெளி இருக்கும் சில சொல்ல முடியாத விசயங்களில். ஆனால் மனதில் தோன்றுவதையும் நம் காதல் விஷயங்களையும் கூட விருப்பமாக சொல்லலாம் தோழி,தோழனிடத்தில் உரிமையாய்.

உறவுகள் அனைவருமே காரியம் ஆவதற்காக நமக்காக போடுவார் வேஷம். நட்பு என்ற ஒன்றில் மட்டுமே எதையும் எதிர்பாராமல் உண்மையாக கிடைக்கும் நேசம்.

உறவுகள் அனைவருமே காரியம் ஆவதற்காக நமக்காக போடுவார் வேஷம். நட்பு என்ற ஒன்றில் மட்டுமே எதையும் எதிர்பாராமல் உண்மையாக கிடைக்கும் நேசம்.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இன்பம் என்ற ஒன்றிலே கலக்க வேண்டுமா? என்றென்றும் குதூகலமாகவும் கலகலப்புடன் செயல் பட வேண்டுமா? -இவை அனைத்துமே ஒரு சேர கிடைக்கும் என் தோழர்களிடையே நான் பழகும் போது.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இன்பம் என்ற ஒன்றிலே கலக்க வேண்டுமா? என்றென்றும் குதூகலமாகவும் கலகலப்புடன் செயல் பட வேண்டுமா? -இவை அனைத்துமே ஒரு சேர கிடைக்கும் என் தோழர்களிடையே நான் பழகும் போது.

காதல் வந்தால் இன்பம் தரும் காதலியை விட கஷ்டம் வந்தால் ஆறுதலாக இருந்து ஆதரவு அளிக்கும் நண்பன் என்றுமே எல்லாரையும் விட ஒரு படி மேல் தானே.

காதல் வந்தால் இன்பம் தரும் காதலியை விட கஷ்டம் வந்தால் ஆறுதலாக இருந்து ஆதரவு அளிக்கும் நண்பன் என்றுமே எல்லாரையும் விட ஒரு படி மேல் தானே.

எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ஒரு நொடியில் உன்னிடம் மனம் விட்டு பேசும் போதும் உன் புன்னகையால் கேலி பேச்சுக்களில் என்னை கலாய்க்கும் போதும் எங்கேயோ தானடா என் கவலைகள் எல்லாமே அந்த நொடியிலே மறைந்து போய் விடுகின்றது

எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ஒரு நொடியில் உன்னிடம் மனம் விட்டு பேசும் போதும் உன் புன்னகையால் கேலி பேச்சுக்களில் என்னை கலாய்க்கும் போதும் எங்கேயோ தானடா என் கவலைகள் எல்லாமே அந்த நொடியிலே மறைந்து போய் விடுகின்றது…!

எத்தனை ஜென்மங்கள் நாம் இந்த பூமியில் ஜனனித்தாலும் நீயும் நானும் என்றுமே பிரியாது நட்பு என்ற பாச வலைக்குள் நாம் என்றென்றும் மூழ்கி கிடக்க வேண்டும் என்பதே நான் வேண்டும் கடவுளிடம் கேட்க துடிக்கும் என் ஆசை

எத்தனை ஜென்மங்கள் நாம் இந்த பூமியில் ஜனனித்தாலும் நீயும் நானும் என்றுமே பிரியாது நட்பு என்ற பாச வலைக்குள் நாம் என்றென்றும் மூழ்கி கிடக்க வேண்டும் என்பதே நான் வேண்டும் கடவுளிடம் கேட்க துடிக்கும் என் ஆசை.

முதல் நாளில் பார்த்ததில் இருந்த அதே புன்னகை என்றும் மாறாமல் கடைசி வரை நட்பில் மட்டுமே தொடரும்

முதல் நாளில் பார்த்ததில் இருந்த அதே புன்னகை என்றும் மாறாமல் கடைசி வரை நட்பில் மட்டுமே தொடரும்.

ஒரு நல்ல நண்பர்களுக்குள் அவர்கள் சொல்லும் கருத்தில் வேறுபாடு வரலாம் ஆனால் சிறிது கூட வாழ்க்கையில் பிரிவு என்பது அமைய கூடாது

ஒரு நல்ல நண்பர்களுக்குள் அவர்கள் சொல்லும் கருத்தில் வேறுபாடு வரலாம் ஆனால் சிறிது கூட வாழ்க்கையில் பிரிவு என்பது அமைய கூடாது.

ஏனோ தெரியவில்லை என் அலுவலக அலுப்புகள் மற்றும் பணிசுமைகள் கூட உன்னோடு பேசும்போது பனி போல விலகி விடுகின்றது

ஏனோ தெரியவில்லை என் அலுவலக அலுப்புகள் மற்றும் பணிசுமைகள் கூட உன்னோடு பேசும்போது பனி போல விலகி விடுகின்றது.

என் அன்புமிகு தோழா என்னோடு உனக்கு பல மனஸ்தாபங்கள் வந்து போகலாம் அதை எல்லாம் என்னிடம் நீ கொட்டி தீர்த்துவிடு பகிரங்கமாக. ஏனெனில் இந்த காரணங்களால் நம் பாசத்தில் சற்றும் கூட களங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக.

ஆயிரம் சொந்தங்கள் எனக்கு ஆகாமல் போனாலும் கவலை இல்லை என் நண்பர்களின் தோழமை என்றுமே என்னோடு இருந்து என் வாழ்க்கையில் துணை நிற்பதால்

ஆயிரம் சொந்தங்கள் எனக்கு ஆகாமல் போனாலும் கவலை இல்லை என் நண்பர்களின் தோழமை என்றுமே என்னோடு இருந்து என் வாழ்க்கையில் துணை நிற்பதால்.

பழகிய பொன்னான நாள் காலத்தின் கோலங்களால் மாறுதல் ஏற்பட்டாலும் என்றுமே அன்று முதல் இன்று வரை நம் நட்பு என்னும் ஓடையில் எப்போதும் விரிசல் என்று ஒன்று மட்டும் கட்டாயம் வர கூடாது

பழகிய பொன்னான நாள் காலத்தின் கோலங்களால் மாறுதல் ஏற்பட்டாலும் என்றுமே அன்று முதல் இன்று வரை நம் நட்பு என்னும் ஓடையில் எப்போதும் விரிசல் என்று ஒன்று மட்டும் கட்டாயம் வர கூடாது.

நட்பு என்பது வானம் பூராவும் பரவி இருக்கும் நட்சத்திரங்கள் போன்று. என்றும் தோற்றத்தால் வெண்மையானது குணத்தால் தூய்மையானது

நட்பு என்பது வானம் பூராவும் பரவி இருக்கும் நட்சத்திரங்கள் போன்று. என்றும் தோற்றத்தால் வெண்மையானது குணத்தால் தூய்மையானது.

காதல் என்றுமே நினைத்தாலே இனிக்கும் ஒரு சுகம் என்றாலும் கை குழந்தை போல நட்பு எப்பொழுதும் நினைவிருக்கும் வரை கூடவே இருக்கும்

காதல் என்றுமே நினைத்தாலே இனிக்கும் ஒரு சுகம் என்றாலும் கை குழந்தை போல நட்பு எப்பொழுதும் நினைவிருக்கும் வரை கூடவே இருக்கும்.

கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள், மரத்தடியில் ஒன்றாக அமர்ந்து கேட்ட மெல்லிசை. ஒளிவு மறைவு இல்லாத பேச்சுக்கள், ஆதரவு தேடினால் தோள் கொடுக்கும் தோழி, உதவியை நாடினால் உயிரையே எனக்காக தியாகம் செய்ய துடிக்கும் தோழன் என அனைத்துமே இன்று நினைத்தாலும் சுகம் சேர்க்கிறது. உங்களை எல்லாம் மீண்டும் காண மனம் தவிக்கிறது

கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள், மரத்தடியில் ஒன்றாக அமர்ந்து கேட்ட மெல்லிசை. ஒளிவு மறைவு இல்லாத பேச்சுக்கள், ஆதரவு தேடினால் தோள் கொடுக்கும் தோழி, உதவியை நாடினால் உயிரையே எனக்காக தியாகம் செய்ய துடிக்கும் தோழன் என அனைத்துமே இன்று நினைத்தாலும் சுகம் சேர்க்கிறது. உங்களை எல்லாம் மீண்டும் காண மனம் தவிக்கிறது.

உணர்வுகள் நமக்குள் இருக்கும்வரை எந்த ஒரு உறவுகளாலும் நம் நட்பிற்கு பங்கமில்லை

உணர்வுகள் நமக்குள் இருக்கும்வரை எந்த ஒரு உறவுகளாலும் நம் நட்பிற்கு பங்கமில்லை.

நீ வெற்றி பெற்றால் உன் நட்பை தேடி வரும் நண்பனை விட நீ தோல்வியுறும்போதும் தோள்கொடுத்து உன்னை விட்டு நீங்காமல் ஆதரிப்பவனே என்றுமே உனக்கான உண்மையான நண்பன்.

நீ வெற்றி பெற்றால் உன் நட்பை தேடி வரும் நண்பனை விட நீ தோல்வியுறும்போதும் தோள்கொடுத்து உன்னை விட்டு நீங்காமல் ஆதரிப்பவனே என்றுமே உனக்கான உண்மையான நண்பன்.

சிறகடித்து சுதந்திரமாய் பறக்கும் உல்லாச பறவைகள் போலவே நம் நட்பு என்ற சிறகில் அனைவரும் ஒன்றுபட்டு உல்லாசமாய் பறப்போம்

சிறகடித்து சுதந்திரமாய் பறக்கும் உல்லாச பறவைகள் போலவே நம் நட்பு என்ற சிறகில் அனைவரும் ஒன்றுபட்டு உல்லாசமாய் பறப்போம்.

துணை என்ற ஒன்று உனக்கு உறுதுணையாய் இருந்தால் சாதனை என்பது ஒன்றும் பெரிய சாகசம் அல்லவே

துணை என்ற ஒன்று உனக்கு உறுதுணையாய் இருந்தால் சாதனை என்பது ஒன்றும் பெரிய சாகசம் அல்லவே.

நான் சந்தோஷமாக இருந்தால் அது அனைவருக்கும் தெரியும். நான் சோகமாக இருந்தால் அது என் நண்பனுக்கு மட்டும் தான் புரியும்.

நான் சந்தோஷமாக இருந்தால் அது அனைவருக்கும் தெரியும். நான் சோகமாக இருந்தால் அது என் நண்பனுக்கு மட்டும் தான் புரியும்.

வெயில் நம்மை கொளுத்தும் போது தான் நிழலை பற்றி நினைக்கிறோம் அது போலவே கஷ்டம் என்ற ஒன்று நமக்கு வரும்போது தான் நல்ல நட்பின் பெருமையை நாம் உணருகிறோம்

வெயில் நம்மை கொளுத்தும் போது தான் நிழலை பற்றி நினைக்கிறோம் அது போலவே கஷ்டம் என்ற ஒன்று நமக்கு வரும்போது தான் நல்ல நட்பின் பெருமையை நாம் உணருகிறோம்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கட்டாயம் வேண்டும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் தூய்மையான ஒரு நட்பு

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கட்டாயம் வேண்டும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் தூய்மையான ஒரு நட்பு.

உலகம் என்ற ஒன்றில் எனக்கு தெரிந்ததில் இருந்து நான் கண்ட சிறப்பு வாய்ந்த ஒன்று நண்பர்கள்

உலகம் என்ற ஒன்றில் எனக்கு தெரிந்ததில் இருந்து நான் கண்ட சிறப்பு வாய்ந்த ஒன்று நண்பர்கள்.

வாழ்க்கையில் நம்மை ஜெயிக்க வைப்பதற்கான ஒரு உந்துகோள், நம் திறமையை கணித்து உலகிற்கு வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு ஜீவன், சோர்ந்து போய் தடுமாறினாலும் நம்மை தேற்றி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாசமிகு தோழன் அல்லது நேசமிகு தோழியை நண்பர்களாக்கி வைத்திருப்பவர்கள் என்றுமே அதிஷ்டசாலிகளே

வாழ்க்கையில் நம்மை ஜெயிக்க வைப்பதற்கான ஒரு உந்துகோள், நம் திறமையை கணித்து உலகிற்கு வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு ஜீவன், சோர்ந்து போய் தடுமாறினாலும் நம்மை தேற்றி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாசமிகு தோழன் அல்லது நேசமிகு தோழியை நண்பர்களாக்கி வைத்திருப்பவர்கள் என்றுமே அதிஷ்டசாலிகளே.

Comments

 1. V. LogaN

  நிழலை போல்
  உன்னை
  பின்தொடர்வேன் காலம் முழுவதும்
  உன் காதலானாக அல்ல
  ஒரு காவலனாக….✨️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.