1என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் என்கிறான் அவன்
அவள் யோசிக்கிறாள்
யார் மாதவனா.மனோவா.கபிலனா, அல்லது கம் lஷனா சிவராமோ யார் இவன்
ஆண் lகளின் அன்பினால் நிறைந்தது அவள் உலகு…..
2
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசைகொண்டான்
ஆசை தான் துன்பத்திற்ற்கு
காரணம் என்றாள் அவள்
நீ அருகிருந்தால் துன்பமும் இன்பமே
என்றான் அவன்
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி
ஐ லவ் யூ என்றாள் அவள் ….
3
தொட்டால் பூ மலரும் என
ஒரு கவிஞன் சொன்னதை நம்பி மொட்டுக்களை தொட்டுப் பார்த்து ஏமாறுகிறான் அப்பாவி ரசிகன்…
இருவர் ஒருவராவதும்
பழரசத் தோட்டம் பனி மலர் கூட்டம் ஆக பாவை முகம் மாறுவதும் இன்னும் நடக்கவில்லை
தொடாமல் மலர்கிறது பூ
அதற்குரிய நேரத்தில்
4
மாம்பழம் விற்பவளிடம் மாம்பழம் வாங்காமல் அவள் கன்னத்தை கேட்கிறான் அவன்..
அவள் கன்னத்திற்கு இனிப்பைச் சேர்த்த கடவுளுக்கு போற்றித் துதிக்கிறான் …..
இப்போது
அந்தப் பூவில் தேன் எடுக்க வண்டாய் மாறி இருக்கிறான் இவன்…..
5
-உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்கிறாள் அவள் —
ஆ —999 பேரும் யாராயிருப்பார்கள்
அவர்களுக்கும்
இவளுக்கும் என்ன உறவு
யோசிக்க யோசிக்க
அவனுக்கு தலை சுற்றுகிறது
யாராவது அவனுக்கு
ஒரு இளனி கொடுங்கள் பிளீஸ் …..