மரணம் நிகழ்வது ஒரு முறை தான் ஆனால் இந்த மனதில் உள்ள உன் நினைவுகள் என்னை கொல்லுதே ஆயிரம் வழிகளில்…!
மௌனம் தந்து கொல்லாதே…! தனிமை தவிப்பை அளிக்காதே…! கோபம் காட்டி திட்டாதே..! மனதை மறைத்து நடிக்காதே…! நீ சொன்ன வார்த்தைகள் என் மனதை தினம் பந்தாடுதே…!
வாழ்க்கையில் தினம் பலவித எதிர்பார்ப்புகள்..! ஒவ்வொரு எதிர்பார்ப்புகளிலும் பலவித ஆசைகள்..! ஒவ்வொரு ஆசையிலும் ஏற்படும் ஏமாற்றங்கள்…! அந்த ஏமாற்றங்களை சில சமயம் ஏற்றுக்கொண்டும் ஏனோ சில சமயம் ஏற்று கொள்ளாத மனம்…! இவை அனைத்தையும் கடந்த மனதின் ஏக்கங்கள் என்றுமே சொல்லப்படாத சோகத்தின் பிரதிபலிப்புகள்…!
நிஜம் சில சமயம் சிரிக்க வைக்கும் …!
நிஜம் சில சமயம் சிந்திக்க கற்றுக் கொடுக்கும் …!
நிஜம் சில சமயம் கவலையை பரிசாக தரும் …!
நிஜம் சில சமயம் ஏமாற்றத்தில் போய் முடியலாம் …!
நிஜம் சில சமயம் உன் பார்வையில் பொய்யாகவும் போகலாம் …!
அது சரி! இதில் எது நிஜமான உண்மை …???
நிஜம் என்றுமே நிஜமே…!!! நாம் பார்க்கும் பார்வையில் அது உண்மையில் பிரதிபலிக்கும் 💯….!!!!