என் கனவுகளில் மிதக்கும் உயிருள்ள ஓவியம் தான் கவிதை பக்கம் என்னும் இந்த வலைதளம். முழுக்க முழுக்க என் கற்பனைக்கே உரியது. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சிறு வயது முதலே கவிதை மீது ஆர்வம் உள்ள எனக்கு கல்லூரி படிப்பின் போது டைரியில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. பல சமயம் என்னுடைய கைத்தொலைபேசியின் குறுஞ்செய்திகளில் கவிதைகளை பதிவிட்டு சேமித்து வைத்து அதை தொலைப்பது வழக்கம்.
எனவே எனக்கான ஒரு வலைதளம் உருவாக்கி எனது கவிதைகளை பதிவிட நான் செய்த சிறு முயற்சியே இந்த இணையதளம்.
முதலில் என் பதிவுகளை மட்டுமே பதிவிட்டு வந்தேன். பின் என் நண்பர்களின் பதிவுகளையும் பதிவிட முடிவு செய்தேன்.
என் இணையதள பக்கத்திற்கு ஆதரவு தரும் அனைத்து தமிழ் நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ப மனோஜ்.
Comments
நெகிழி
🦀🦀🦀🦀🦀
நெகிழிப் பைகள் பிறந்ததடா,
நிறைய காற்றில் பறந்ததடா….
விலையே இல்லாப் பொருளாக,
வீடுகள் நோக்கி வருகுதடா…
ஊர்கள் தோறும் நெகிழி மலை,
ஒருத்தருக்கு மிங்கே அறிவுமிலை…
குழந்தை குடிக்கும் பால்டப்பா,
குருதியில் உருகி கலக்குதப்பா…
மூத்தோர் வாங்கும் மருந்திலுமே,
சாத்தானாக நெகிழிதானே…
உணவுப் பொருக்கு நெகிழி இலை,
உலகில் மறையுது வாழை இலை…
பண்டிகை ஒன்று வந்திட்டால்,
வண்டிகள் போட்டு வாறனுமே…
வளரும் இந்த நெகிழி மலை,
இமயம் ஒரு நாள் சின்ன மலை…
தலையில் கல் விழும் நிலையிலுமே,
தானே அடியில் நிற்கின்றாய்…
பஞ்ச பூதம் எல்லாமே,
அஞ்சிப் போயி நடுங்குதடா…
கெஞ்சி கெஞ்சி பாக்குதடா,
கிறுக்குப் பய நீ கேக்கலையே…
உலகை ஆளும் வரம் மட்டும்,
ஒரு நாள் எனக்கு கிடைக்கட்டும்…
நெகிழியை முதலில் கொடுத்தவனை,
நிற்க வச்சே சுட்டிடுவேன்…
நெகிழியை நீயே எறித்தாயே,
உன் ஆயுளை நீயே குறைத்தாயே…
அறிவு கெட்டு வாழும் முறை,
அழியப் போகுதே தலைமுறை…
உலகம் மறுபடி தோன்றிட்டால்,
உயிர் பெற்று மனிதன் வந்திட்டால்,
நெகிழி மலையை கணக்கிட்டு-உன்
அழிவு நிலையை அறிந்திடுவர்-அப்ப
சிந்து சமவெளி தோற்றிடுமே-நீ
சிந்தும் நெகிழியின் சரித்திரமே..!
க.செல்வராசு
👻👻👻👻👻👻