காதல் சுவாசம் -காதல் கவிதை
காதல் சுவாசம் போன்றது. காதலை ஒவ்வொரு நிமிடமும் சுவாசித்து கொண்டே இருக்கிறேன் என் காதலனுக்குகாக.
காதலால் மரணம் கூட சுகம்
இறைவன் படைத்ததில் சுகமான ஒன்று காதல். எதற்காக வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசியில் மரணம். காதலுக்காக வாழ்ந்தால் அந்த மரணம் கூட சுகம்.
உன்னை நேசிக்கிறேன் – காதல் கவிதை
பகல் நேசிப்பது இரவை. மழை நேசிப்பது பூமியை. காதல் நேசிப்பது இதயத்தை. நான் நேசிப்பது உன்னை. நீ நேசிப்பது என்னை.
பார்வை மொழி – காதல் கவிதை
வார்த்தை மொழிகளை விட பார்வை மொழிகள் போதும் இதயத்திற்கு.
காதல் இலட்சியம் – காதல் கவிதை
வாழ்க்கையில் பல இலட்சியங்கள் இருந்தாலும், சிலருக்கு மட்டும் தான் அமைவது காதல் இலட்சியம்.
விழி இதயம் தேடல் -காதல் கவிதை
நீ தொலைந்தால் என் விழிகள் தேடுவதும் உன்னையே என் இதயம் தேடுவதும் உன்னையே.
இதயத்தை திருடி செல்கிறாய் -காதல் கவிதை
காதலின் வேலையே இதயத்தை திருடுவதா? நீ போகையில் என் இதயத்தை திருடி செல்கிறாய்.
மறக்க முடியாத கல்வெட்டுகள் – காதல் கவிதை
உன்னுடன் நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும், உன்னுடன் நான் பயணிக்கும் ஒவ்வொரு கணங்களும் என் வாழ்க்கையின் மறக்க முடியாத கல்வெட்டுகள்.
கடவுள் வரம் – காதல் கவிதை
கடவுள் என்னிடம் என்ன வரம் வேண்டும் என கேட்டால் என் வாழ்க்கையில் உன்னை விட்டு பிரியாத நாட்கள் வேண்டும் என கேட்பேன்
கடல் அலைகள் – காதல் கவிதை
கடலின் அலைகள் எப்போதும் ஓய்வது இல்லை.அது போல உன் நினைவுகள் எப்போதும் என் மனதில் இருந்து மாறுவதில்லை. காதல் என்றுமே எல்லை இல்லாத வாழ்வு. அதன் எல்லையை கடந்து வாழ்பவர்கள் தான் காதலர்கள்.













