இதயத்தை செதுக்குகிறாள் – காதல் கவிதை
சிற்பியின் கைகள் சிலையை செதுக்குகிறது. ஆனால் உன் கண்களோ என் இதயத்தை செதுக்குகிறது.
விண்மீன்கள் – காதல் கவிதை
விண்மீன்கள் ஆகாயத்தில் ஒளிர்வது போல நீ என் மனதில் ஒளிர்கிறாய் ஒளிவட்டமாக.
மழை வந்தால் – காதல் கவிதை
மழை வந்தால் தான் பூமி குளிர்கிறது. நீ வந்தால் தான் என் வாழ்வும் மலர்கிறது.
காதலுக்கு கவிதை
காதலுக்கு பல கவிதைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு நீ மட்டும் தான் கவிதை.
நீ என் அருகில் இருந்தால் – காதல் கவிதை
துன்பங்கள் பல இருந்தால் என்ன? நீ என் அருகில் இருப்பாயானால் என் துன்பமும் எனக்கு இன்பம் தான்.
கடிகாரம் முள் – காதல் கவிதை
கடிகாரம் முள் எப்படி எண்களை சுற்றி சுற்றி வருகிறதோ அது போலவே என் மனதும் உன்னையே சுற்றுகிறது.
காதல் இதய நினைவுகள் – காதல் கவிதை
காதல் என்பது இதயத்தில் மூழ்கியிருக்கும் முத்திரையிடப்பட்ட காதலின் நினைவுகள்.
காதல் அறியாதோர் எவருமிலர்
அறியாதோர் எவருமிலர் அறியாமையால் பிறக்கும காதலை பற்றி சொல்ல. உலகம் தெரியாதோர் கூட தெரிந்திருப்பார் காதலை பற்றி.
இதயம் துடிப்பது கூட சுகம் -காதல் கவிதை
இதயம் துடிப்பது கூட சுகம் அதில் நீ இருப்பதால். காதல் செய்வது கூட சுகம் காதலன் நீயாக இருந்தால். மரணம் கூட சுகம் எண்ணில் நீ என்றும் இருந்தால்.
காதலுக்கு பிரிவே இல்லை
காதலுக்கு பிரிவே இல்லை. நம் காதலுக்கு பிரிவு என்ற ஒன்று உண்டாயின் அது நம் உயிர் பிரியும்போதே.













