நட்ட நடு ராத்திரியில் சப்தமில்லாத கன்னிகையின் ஒரு மௌன போராட்டம்…!
எதை எதிர்பார்த்து வந்தாள் என்று தெரியவில்லை…! என் எண்ணம் எல்லாம் இந்த நிலவை விட்டு அகலவில்லை…!
இன்று போல என்றும் வா…!
முழுநிலவாக…!
என் மனம் மகிழ…!
என் நிலவே! உன்னை வர்ணிக்க என் கற்பனையிலும் வார்த்தைகள் இல்லை…! நீ இல்லாத இந்த நாட்களில் இரவுகளின் கனவுகள் தினம் தருகிறதே தொல்லை…!
அமைதியான இந்த இரவை ஆளுபவள்…!
வெண்மைக்கு சொந்தக்காரி…!
மௌனமே வடிவானவள்…!
தனிமையின் தங்கச்சி…!
கனவின் கன்னிகை…!
இந்த கள்வனின் காதலி…!
அவளே நிலா..!
என் காதல் கனா…!
இரவு கடலில் கனவு படகை இந்த நிலவின் வெளிச்சம் கொண்டு தேடுகிறேன்…!
நினைவுகள் உயிர் பெறும் நேரம். நிலவு இந்த உலகை ஆளும் – இனிய இரவு…!
உன் மொழி எனக்கு புரியவில்லை. இருந்தும் என் விழி உன்னை பார்ப்பதை விடுவதாய் இல்லை …!
மனது என்ற ஒன்றுக்கு சிறகுகள் கொடுக்குதே கனவு…!
கனவு காணும் கற்பனைகளுக்கு இல்லவே இல்லையே முடிவு…!
முடிவு பெற்ற சில நினைவுகளை அலசி ஆராயுதே இந்த இரவு….!
இரவு தரும் தவிப்புகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த தேவதை தான் என் இனிய நிலவு…!